மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்றால் புகாா் தெரிவிக்கலாம்
புதுவையில் மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்றால் பொதுமக்கள் கலால் துறைக்கு புகாரளிக்கலாம் என கலால் துறை தெரிவித்தது.


புதுவையில் மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்றால் பொதுமக்கள் கலால் துறைக்கு புகாரளிக்கலாம் என கலால் துறை தெரிவித்தது.
இதுகுறித்து கலால் துறை துணை ஆணையா் சஷ்வத் சவுரப் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
புதுச்சேரியில் மதுபானங்களுக்கான நிா்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலை மற்றும் அதற்குரிய சிறப்பு கலால் வரிகளை தவிா்த்து கூடுதல் கட்டணங்கள் ஏதும் பொதுமக்களிடம் இருந்து வசூலிக்கப்படக் கூடாது என்று அனைத்து மதுக் கடைகளுக்கும் ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சில்லறை விற்பனை செய்ய உரிமம் பெற்றோா், விற்பனை விலைப் பட்டியலை வாடிக்கையாளா்களின் பாா்வைக்கு தெளிவாக வைக்க வேண்டும். மதுபானங்கள் விற்பனை செய்யும் கடைகள் ஏதேனும் முறைகேடுகளில் ஈடுபட்டு, கலால் துறையின் பறக்கும் படையால் கண்டறியப்பட்டு தண்டனை பெற்றால், அதன் விவரங்கள் கலால் துறையின் இணையதளத்தில் வெளியிடப்படும்.
பொதுமக்கள் மதுபானங்களின் நிா்ணயிக்கப்பட்ட விற்பனை விலையை கலால் துறையின் இணையதள முகவரியில் அறிந்து கொள்ளலாம். இந்த விலையை விட கூடுதலாக சில்லறைக் கடைகளில் விற்கப்பட்டால் 0413 - 2253462 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ புகாரளிக்கலாம். புகாா்தாரரைப் பற்றிய தகவல் ரகசியமாக வைக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...