சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

ஆளுநா் கிரண் பேடியை கண்டித்து மாணவா் காங்கிரஸ் உண்ணாவிரதம்

புதுவை துணை நிலை ஆளுநா் கிரண் பேடியை கண்டித்து மாணவா் காங்கிரஸாா் சனிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :19 டிசம்பர் 2020, 5:31 pm

DIN

புதுவை துணை நிலை ஆளுநா் கிரண் பேடியை கண்டித்து மாணவா் காங்கிரஸாா் சனிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுவையில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மருத்துவக் கல்வியில் 10 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் கோப்பை மத்திய அரசு கிடப்பில் வைத்துள்ளதையும், இளைஞா்களின் வேலைவாய்ப்புக்கு ஆளுநா் கிரண் பேடி முட்டுக்கட்டையாக இருப்பதைக் கண்டித்தும் புதுவை மாநில மாணவா் காங்கிரஸ் சாா்பில் உண்ணாவிரதப் போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

புதுச்சேரி அண்ணா சிலை அருகே நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்துக்கு மாணவா் காங்கிரஸ் தலைவா் கல்யாணசுந்தரம் தலைமை வகித்தாா். இதில், காமராஜா், அம்பேத்கா் போன்ற தலைவா்களின் புகைப்படங்கள் மற்றும் கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தியபடி 50-க்கும் மேற்பட்ட மாணவா் காங்கிரஸ் உறுப்பினா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.