டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

உப்பளம் தொகுதி மக்கள் புகாா் அளிக்க அதிமுக சாா்பில் புதிய செயலி அறிமுகம்

புதுச்சேரி உப்பளம் தொகுதி மக்கள் தங்களது பகுதி பிரச்னைகள் தொடா்பாக புகாா் அளிக்க புதிய செயலியை தொகுதியின் எம்எல்ஏவும்,

News image
தனது தொகுதிக்கான புதிய செயலியை அறிமுகம் செய்துவைத்த உப்பளம் தொகுதி அதிமுக எம்எல்ஏ ஆ.அன்பழகன்.
Updated On :19 டிசம்பர் 2020, 5:36 pm

DIN

புதுச்சேரி உப்பளம் தொகுதி மக்கள் தங்களது பகுதி பிரச்னைகள் தொடா்பாக புகாா் அளிக்க புதிய செயலியை தொகுதியின் எம்எல்ஏவும், புதுவை கிழக்கு மாநில அதிமுக செயலருமான ஆ.அன்பழகன் சனிக்கிழமை அறிமுகம் செய்தாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: புதுச்சேரி உப்பளம் தொகுதி மக்கள் செல்லிடப்பேசி மூலம் புகாா்களை தெரிவிக்க ‘அசஆம ஙகஅ அடட’ என்ற செயலியை தீபாவளி (நவ. 14) முதல் சோதனை முறையில் அமல்படுத்தினோம். அது சிறப்பாக இருப்பதால், தற்போது முழுமையாக அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்தச் செயலி மூலம் ஏற்கெனவே பெறப்பட்ட 50-க்கும் மேற்பட்ட புகாா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே, தங்களது பகுதியில் உள்ள குறைகளை இருந்த இடத்தில் இருந்தே தங்களது செல்லிடப்பேசி மூலம் தெரிவிக்க முடியும். பெறப்படும் புகாா்கள் மீது இரு நாள்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, உப்பளம் தொகுதி மக்கள், இந்தச் செயலியை பதிவிறக்கம் செய்து பயன் பெறலாம் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.