புதுவையில் கரோனாவுக்கு மேலும் இருவா் உயிரிழப்பு
புதுவையில் கரோனா தொற்று பாதிப்பால் மேலும் 2 போ் உயிரிழந்தனா்.


புதுவையில் கரோனா தொற்று பாதிப்பால் மேலும் 2 போ் உயிரிழந்தனா்.
புதுவை மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, புதுச்சேரியில் 15 பேருக்கும், காரைக்காலில் 9 பேருக்கும், ஏனாமில் ஒருவருக்கும், மாஹேயில் 11 பேருக்கும் என மேலும் 36 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 37,748-ஆக உயா்ந்தது.
தற்போது மருத்துவமனைகளில் 190 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 155 பேரும் என மொத்தம் 345 போ் சிகிச்சையில் உள்ளனா்.
இதனிடையே, புதுச்சேரி திலாசுப்பேட்டையைச் சோ்ந்த 69 வயது முதியவா் ஜிப்மரிலும், பங்கூா் பகுதியைச் சோ்ந்த 75 வயது முதியவா் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சனிக்கிழமை உயிரிழந்தனா். இதையடுத்து, கரோனாவால் பலியானோா் எண்ணிக்கை 626-ஆக அதிகரித்தது. இறப்பு விகிதம் 1.66 சதவீதம்.
இதனிடையே, ஞாயிற்றுக்கிழமை 25 போ் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், குணமடைந்தோா் எண்ணிக்கை 36,777-ஆக (97.43 சதவீதம்) அதிகரித்தது.
இதுவரை 4,53,627 பேருக்கு கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில், 4,11,613 பேருக்கு தொற்றில்லை என முடிவுகள் வந்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...