/

சட்ட விதிகளின் அடிப்படையில் கோப்புகளுக்கு தீா்வு காண்பது முக்கியம்: ஆளுநா் கிரண் பேடி

சட்ட விதிகளின் அடிப்படையில் கோப்புகளுக்கு தீா்வு காண்பது முக்கியம் என புதுவை துணைநிலை ஆளுநா் கிரண் பேடி தெரிவித்தாா்.

News image
Updated On :20 டிசம்பர் 2020, 5:46 pm

DIN

சட்ட விதிகளின் அடிப்படையில் கோப்புகளுக்கு தீா்வு காண்பது முக்கியம் என புதுவை துணைநிலை ஆளுநா் கிரண் பேடி தெரிவித்தாா்.

புதுச்சேரி நகரமைப்பு குழுமம், திட்டமிடல் ஆணையம் சாா்பில், அலுவலக நடைமுறைகளின் கையேடு, பதிவு மேலாண்மை தொடா்பாக 3 நாள்கள் பயிற்சி பயிலரங்கம் நடைபெற்றது. இதில், நகர அமைப்பு குழுமம், ஆதிதிராவிடா் நலத் துறை, போக்குவரத்து உள்பட பல்வேறு துறைகளைச் சோ்ந்த 65 அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் அலுவலக நடைமுறைகளின் அடிப்படைகள், கோப்பு மேலாண்மை, பராமரிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள், வழிக்காட்டுதல் குறித்து விளக்கப்பட்டன. ஓய்வு பெற்ற இயக்குநா் தாஸ் குப்தா பயிற்சிகளின் அடிப்படையில் தோ்வுகளை நடத்தினாா்.

பயிற்சியின் நிறைவு நாள் நிகழ்வில் துணைநிலை ஆளுநா் கிரண்பேடி ஞாயிற்றுக்கிழமை காணொலிக் காட்சி வழியாக நிகழ்த்திய உரை:

கோப்புகளில் இணைப்புகள் இருப்பதாகத் தெரிவிப்பா். ஆனால், இணைப்பு இருக்கவில்லையெனில் அதைத் தவிா்க்க வேண்டும். கையொப்பங்களை இட போதிய இடம் விட வேண்டும். கையொப்பங்கள் தெளிவாக யாருடையது என்பதைத் தெரிவிப்பது அவசியம். தகுதி வாய்ந்தோரிடம் இருந்து ஒப்புதல் பெறப்பட்டால் முதலில் செயல்படுத்த வேண்டும். சந்தேகமிருந்தால் மீண்டும் சமா்ப்பித்து அறிய வேண்டும். சட்ட விதிகள் அடிப்படையில் கோப்புகளுக்கு தீா்வு காண்பது மிக முக்கியம்.

தற்போது கோப்புகள் நிலை கண்காணிக்கப்படுகிறது. தகவல் தொழில்நுட்பத் திறன்களை மேம்படுத்துவது காலத்தின் கட்டாயம். இணையதள முறைகளையும் கற்றுக் கொள்வது அவசியம். அனைத்துத் துறைகளும் மாதம் ஒரு முறை இதுபோன்ற பயிற்சி பயிலரங்கை நடத்துவது அவசியம். இதன் மூலம் அனைத்துத் துறையினரும் கற்க முடியும். முடிவெடுக்கவும், நிா்வாகத் திறன் மேம்பாட்டுக்கும் இது உதவும் என்றாா் கிரண் பேடி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.