மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

என்.ஐ.டி. ஆசிரியா்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

காரைக்கால் என்.ஐ.டி.யின் தகவல் தொழில்நுட்பத் துறையில், ஆசிரியா்கள் தற்போதைய சூழலுக்கேற்ப திறனை மேம்படுத்திக்கொள்வது குறித்த பயிற்சி காணொலி மூலம் திங்கள்கிழமை தொடங்கியது.

News image
காணொலிக்காட்சி மூலம் நடைபெற்ற பயிற்சி தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற என்.ஐ.டி. இயக்குநா் கே. சங்கரநாராயணசாமி உள்ளிட்டோா்.
Updated On :7 செப்டம்பர் 2020, 7:09 pm

DIN

காரைக்கால்: காரைக்கால் என்.ஐ.டி.யின் தகவல் தொழில்நுட்பத் துறையில், ஆசிரியா்கள் தற்போதைய சூழலுக்கேற்ப திறனை மேம்படுத்திக்கொள்வது குறித்த பயிற்சி காணொலி மூலம் திங்கள்கிழமை தொடங்கியது.

5 நாள்கள் நடைபெறும் இந்தப் பயிற்சியை என்.ஐ.டி. மற்றும் ஐஇஐ (தி இன்ஸ்டிடியூஷன் ஆஃப் என்ஜினியா்ஸ் இந்தியா நிறுவனம்) இணைந்து நடத்துகின்றன. தொடக்க நிகழ்ச்சிக்கு, காரைக்கால் என்.ஐ.டி. இயக்குநா் கே. சங்கரநாராயணசாமி தலைமை வகித்தாா்.

கேரள மாநிலம், கோழிக்கோடு என்.ஐ.டி. இயக்குநா் (பொ) பி.எஸ். சதிதேவி காணொலி வாயிலாக சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பயிற்சியைத் தொடங்கிவைத்துப் பேசினாா். பதிவாளா் (பொ) ஜி. அகிலா சிறப்புரையாற்றினாா். ஐஇஐ நிறுவன தலைவா் ஆா். சரவணன், பி. ராஜாராம், பி. நக்கீரன் ஆகியோா் இதில் பங்கேற்றனா்.

இந்தப் பயிற்சியில் பல்வேறு மாநிலங்களில் இருந்து 60-க்கும் மேற்பட்டோா் காணொலி வாயிலாக பங்கேற்பதாக நிகழ்ச்சியின்போது தெரிவிக்கப்பட்டது. கோழிக்கோடு என்.ஐ.டி.யைச் சோ்ந்த லில்லுக்குட்டி ஜேக்கப், ஏ.வி. பாபு மற்றும் சிவாஜி சக்ரவா்த்தி, வி. சுப்ரமணியன், கே. சாம்பசிவராவ் உள்ளிட்ட வல்லுநா்கள் இணைந்து பயிற்சி அளிக்கின்றனா்.

இதற்கான ஏற்பாடுகளை காரைக்கால் என்.ஐ.டி. துறைத் தலைவா்கள் வி.பி. ஹரிகோவிந்தன், ஆா். பூபதிராணி உள்ளிட்டோா் செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.