புதுச்சேரியில் மீன்வள மசோதாவைக் கண்டித்து மீனவர் சங்கத்தினர் கடலில் இறங்கி போராட்டம்
புதுச்சேரியில் மத்திய அரசின் கடல்சார் மீன்வள சட்ட மசோதாவைக் கண்டித்து, மீனவர் சங்கத்தினர் கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.


புதுச்சேரியில் மத்திய அரசின் கடல்சார் மீன்வள சட்ட மசோதாவைக் கண்டித்து, மீனவர் சங்கத்தினர் கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி மீனவர் சங்க கூட்டமைப்பினர், மத்திய அரசு புதிதாக கொண்டு வந்துள்ள கடல்சார் மீன்வள மசோதாவைக் கண்டித்து, புதுச்சேரி சோலை நகர் கடற்கரையில் இறங்கி மீனவர்கள் திங்கட்கிழமை காலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்கள் படகுகளில் கறுப்புக் கொடி, கைகளில் கருப்புக்கொடி ஏந்தி, கடல்சார் மீன்வள மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மீனவர் சங்க கூட்டமைப்பு தலைவர் சகாயராஜ் தலைமையில் திரண்ட மீனவர்கள், மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் வகையில் கொண்டுவரப்படவுள்ள புதிய கடல்சார் மீன்வள சட்ட மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.
இதையும் படிக்கலாமே- மீன்வள மசோதா என்ன சொல்கிறது? மீனவர்கள் ஏன் எதிர்க்கிறார்கள்?
மீனவர்களுக்கான மானியம் குறைப்பு, மீன்பிடி எல்லைகளை குறுக்கி மீனவர்களின் மீன்பிடி தொழிலை நசுக்கும் வகையில் கொண்டு வர உள்ள இந்த மசோதாவால் மீனவர் வாழ்வாதாரம் பாதிக்கும் என்பதால், மத்திய பாஜக அரசு இச்சட்டத்தை உடனே திரும்பப் பெற வேண்டும்.
இதனை வலியுறுத்தி மீனவர்கள் தொடர் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தனர். கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் சோலை நகர் போலீசார் அப்புறப்படுத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...