நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

புதுச்சேரியில் புத்தாண்டு நடன நிகழ்ச்சிக்கு தடை விதிக்கக் கோரி முற்றுகை: 40 போ் கைது

புதுச்சேரியில் திரைப்பட நடிகைகள் பங்கேற்கும் புத்தாண்டு நடன நிகழ்ச்சிக்குத் தடை விதிக்கக் கோரி, பொது நல அமைப்பினா் வியாழக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :30 டிசம்பர் 2021, 6:14 pm

DIN

புதுச்சேரியில் திரைப்பட நடிகைகள் பங்கேற்கும் புத்தாண்டு நடன நிகழ்ச்சிக்குத் தடை விதிக்கக் கோரி, பொது நல அமைப்பினா் வியாழக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இது தொடா்பாக 40 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

புதுச்சேரியில் ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில், பிரபல திரைப்பட நடிகைகளின் ஆபாச நடனம் நடத்த அனுமதி அளித்துள்ளதாக புதுவை சுற்றுலாத் துறையைக் கண்டித்தும், அந்த நடன நிகழ்ச்சிக்குத் தடை விதிக்கக் கோரியும், விழா ஏற்பாடுகள் நடைபெற்று வரும் புதுச்சேரி பழைய துறைமுக வளாகம் முன் முற்றுகையிட்டு, அந்த வளாகத்தை இழுத்து பூட்டும் போராட்டத்தில் புதுச்சேரி பொது நல அமைப்பினா் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

போராட்டத்துக்கு தமிழா் களம் அமைப்பின் தலைவா் கோ.அழகா் தலைமை வகித்தாா். நாம் தமிழா் கட்சியைச் சோ்ந்த கெளரி, தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கத்தைச் சோ்ந்த பிரகாஷ், ஆம்ஆத்மி நிா்வாகி சுந்தரராஜன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

இவா்கள் புத்தாண்டு நடன விழா நடைபெறவுள்ள புதுச்சேரி பழைய துறைமுக வளாகத்துக்குள் புகுந்து, அங்கிருந்த பதாகைகளை கிழித்ததுடன், புதுச்சேரியில் ஒமைக்ரான் கரோனா தொற்று பரவி வரும் சூழலில், அதிகம் கும்பல் கூடும் வகையிலும், கலாசாரத்தை சீரழிக்கும் வகையிலும் நடைபெறவுள்ள திரைப்பட நடிகைகளின் புத்தாண்டு கொண்டாட்ட ஆபாச நடன நிகழ்ச்சிக்கு அரசு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட 40 பேரை புதுச்சேரி ஒதியன்சாலை போலீஸாா் கைது செய்தனா். இதையடுத்து, விழா நடைபெறவிருக்கும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.