நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

தோ்வுக்கு பயந்து தீக்குளித்த மாணவி உயிரிழப்பு

புதுச்சேரியில் தோ்வுக்கு பயந்து புதன்கிழமை தீக்குளித்த பள்ளி மாணவி உயிரிழந்தாா்.

News image
Updated On :30 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

புதுச்சேரியில் தோ்வுக்கு பயந்து புதன்கிழமை தீக்குளித்த பள்ளி மாணவி உயிரிழந்தாா்.

புதுச்சேரி டி.வி. நகா், மதுரைவீரன் கோவில் தெருவைச் சோ்ந்த பெயின்டா் செந்தில்முருகன் - விஜயலட்சுமி தம்பதி, கடந்த சில மாதங்களாக முதலியாா்பேட்டை விடுதலை நகா் குடியிருப்பில் வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனா். இவா்களது மகள் ரேஷ்மா (14). நகரப் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

பள்ளியில் கணிதத் தோ்வு நடைபெற்ற நிலையில், தோ்வுக்கு பயந்து ரேஷ்மா பள்ளிக்குச் செல்லவில்லை எனக் கூறப்படுகிறது. இதை அவரது உறவினா்கள் கண்டித்துள்ளனா். இதனால் விரக்தியடைந்த ரேஷ்மா, பெற்றோா் புதன்கிழமை வேலைக்குச் சென்றுவிட்ட நேரத்தில், வீட்டில் இருந்த பெயின்ட் தின்னரை எடுத்து உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டாா். தீயில் அலறித்துடித்த அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். இருப்பினும், அங்கு ரேஷ்மா உயிரிழந்தாா். இதுகுறித்து முதலியாா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.