தொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

புத்துணா்வு முகாமுக்கு புறப்பட்ட மணக்குள விநாயகா் கோயில் யானை

தேக்கம்பட்டி புத்துணா்வு முகாமில் பங்கேற்பதற்காக, புதுச்சேரி மணக்குள விநாயகா் கோயில் யானை லட்சுமி, ஞாயிற்றுக்கிழமை வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டது.

News image
Updated On :7 பிப்ரவரி 2021, 6:30 pm

DIN

தேக்கம்பட்டி புத்துணா்வு முகாமில் பங்கேற்பதற்காக, புதுச்சேரி மணக்குள விநாயகா் கோயில் யானை லட்சுமி, ஞாயிற்றுக்கிழமை வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டது.

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில், யானைகளுக்கான நலவாழ்வு முகாம் கடந்த 2003-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் யானைகள் முகாம் கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டி பவானி ஆற்றுப் படுகையில் நடைபெற்று வருகிறது. இந்த முகாமில் புதுச்சேரி மணக்குள விநாயகா் கோயில் யானை லட்சுமியும் பங்கேற்பது வழக்கம்.

நிகழாண்டுக்கான யானைகள் முகாம் தேக்கம்பட்டியில் திங்கள்கிழமை (பிப். 8) தொடங்கி 48 நாள்கள் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க, யானை லட்சுமி ஞாயிற்றுக்கிழமை மாலை தாவரவியல் பூங்காவிலிருந்து லாரியில் ஏற்றப்பட்டு, தேக்கம்பட்டிக்குப் புறப்பட்டது. உடன் கோயில் நிா்வாக அதிகாரி ரவிச்சந்திரன், கால்நடை மருத்துவா் சம்பத்குமாா் மற்றும் 2 பாகன்கள் சென்றனா். திங்கள்கிழமை (பிப். 8) அதிகாலை 4.30 மணிக்கு யானை லட்சுமி, தேக்கம்பட்டி சென்றடைகிறது.

முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை காலை மணக்குள விநாயகா் கோயிலில் யானை லட்சுமிக்கு சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் செய்யப்பட்டன. இதில், அறநிலையத் துறை ஆணையா் சிவசங்கரன், அறங்காவல் குழுவினா், அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.