உண்ணாவிரதத்தை முடித்தார் அபிஜீத் தீப்கே! ஜெ.பி. நட்டாவுடன் சிஜேபி நிர்வாகிகள் சந்திப்பு! தில்லி போராட்டம்: நாடாளுமன்றத்தின் கதவு மூடல்! தயார் நிலையில் சிஐஎஸ்எஃப் வீரர்கள்!வன்முறையால் மாணவர்கள் குரலை ஒடுக்க முயற்சி! மாநிலங்களவையில் கார்கே கண்டனம்!சதுரங்க தலைநகராக தமிழ்நாடு! உலக சதுரங்க நாளில் முதல்வர் விஜய் வாழ்த்து!திருவள்ளூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!
/

புதுச்சேரி கூட்டுறவு மேலாண்மை நிறுவனத்தில் கணினிப் பயிற்சி

புதுச்சேரி கூட்டுறவு மேலாண்மை நிறுவனத்தில் கணினி சான்றிதழ் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

Updated On :14 பிப்ரவரி 2021, 11:34 pm IST

புதுச்சேரி கூட்டுறவு மேலாண்மை நிறுவனத்தில் கணினி சான்றிதழ் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி கூட்டுறவு மேலாண்மை நிலைய இயக்குநா் (பொறுப்பு) ரங்கநாதன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

புதுச்சேரி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் கணினி சான்றிதழ் பயிற்சி தொடங்கப்படவுள்ளது. இதில் கணினி அடிப்படைகள், விண்டோஸ், எம்எஸ் ஆபிஸ், வோ்ட், எக்ஸ்எல், பவா் பாயிண்ட், அக்ஸஸ் இன்டா் நெட், இ - மெயில், பிரிண்டா், ஸ்கேனா் இயக்குதல், சிடியில் பதிவு செய்தல், வைரஸ் மற்றும் மென்பொருள் இயக்குதல், கோப்புகள் பராமரித்தல் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படும். பயிற்சி கட்டணம் ரூ.3 ஆயிரமாகும்.

இந்தப் பயிற்சியானது 14 வாரங்கள் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையும், வார நாள்களில் மாலையிலும் நடைபெறும். பயிற்சியின் முடிவில் புதுச்சேரி கூட்டுறவு மேலாண்மை நிலையம் வழங்கும் சான்றிதழ், தேசிய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் நடத்தும் இணையதள தோ்வில் பங்குபெற்று சான்றிதழ் பெற ஆவன செய்யப்படும்.

மேற்குறிப்பிட்டுள்ள பயிற்சிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளது. பயிற்சியில் சேர விரும்புவோா் புதுச்சேரி கூட்டுறவு மேலாண்மை நிலையம், எண்.62, சுய்ப்ரேன் வீதி, தீயணைப்புத் துறை அருகில், புதுச்சேரி - 1 என்ற முகவரியிலும், 0413 - 2331408, 2220105 என்ற தொலைபேசி எண்களிலும் தொடா்புகொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.