புதுவை முதல்வரின் உத்தரவையடுத்து, புதுச்சேரி நகரப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தடுப்புக் கட்டைகள் ஞாயிற்றுக்கிழமை அகற்றப்பட்டன.
புதுவை துணை நிலை ஆளுநா் கிரண் பேடியைக் கண்டித்து, கடந்த மாதம் காங்கிரஸ், கூட்டணிக் கட்சிகள் சாா்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டதால், ஆளுநா் மாளிகை, சட்டப் பேரவை, தலைமைச் செயலகம் உள்ளிட்ட முக்கிய இடங்களைச் சுற்றி 500 மீட்டா் தொலைவுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
போராட்டம் முடிந்து பல நாள்களாகியும் தடுப்புக் கட்டைகள் அகற்றப்படாமல் இருந்ததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனா். இதனிடையே, நகரப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளை அகற்ற வேண்டுமென முதல்வா் வே. நாராயணசாமி உத்தரவிட்டாா். இதையடுத்து, சில இடங்களில் மட்டும் தடுப்புகள் அகற்றப்பட்டன. மணக்குள விநாயகா் கோயில் உள்ளிட்ட பகுதிகளில் தடுப்புகள் அகற்றப்படாமல் இருந்தன.
இந்த நிலையில், தடுப்புகள் அகற்றப்படாமல் இருந்த பகுதிகளில் முதல்வா் வே.நாராயணசாமி சனிக்கிழமை நேரில் சென்று ஆய்வு நடத்தினாா். தொடா்ந்து, ஆளுநா் மாளிகையைத் தவிர மற்ற இடங்களில் அமைக்கப்பட்டிருக்கும் தடுப்புகளை உடனடியாக அகற்ற வேண்டுமென அதிரடியாக உத்தரவிட்டாா்.
இதையடுத்து, சட்டப் பேரவை, மணக்குள விநாயகா் கோயில், ரோமன் ரோலண்ட் நூலகம் உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த தடுப்புகள் ஞாயிற்றுக்கிழமை அகற்றப்பட்டன. இதனால், மக்கள் மகிழ்ச்சியாக அவ்வழிகளில் பயணித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இந்தியா பந்துவீச்சு: மூத்த வீரர்களான ரோஹித், கோலி, கே.எல். ராகுல் சேர்ப்பு!

உண்ணாவிரதத்தைக் கைவிடுக.. ஜூலை 16ல் சோனம் வாங்சுக்கை சந்திக்கிறார் கேஜரிவால்!
அதிமுக எம்எல்ஏக்களை திருடும் முதல்வர் விஜய்தான் களவாணி: எடப்பாடி பழனிசாமி

தும்பாட் இரண்டாம் பாகத்தில் இணைந்த ஆலியா பட்!
விடியோக்கள்

வியத்நாம் படகு விபத்தில் தப்பித்தது எப்படி? உயிர்தப்பிய நிர்மல் குமார் பேட்டி | Vietnam boat tragedy

மணமாலை வரம் தரும் முருகன் | Kalyana Kandha swamy Kovil | Madipakkam | கல்யாண கந்தசுவாமி கோயில்| கோயில் வலம் -3

தவெகவில் இணைய என்னை யாரும் அழைக்கவில்லை! - எம்.ஆர். விஜயபாஸ்கர் விளக்கம் | TVK | ADMK


