தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

புதுச்சேரில் மழை நீரில் அடித்துச் செல்லப்பட்ட இலவச அரிசி

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டையில் பொதுமக்களுக்கு விநியோகிக்க வேண்டிய இலவச அரிசி மழை நீரில் அடித்துச் செல்லப்பட்டு வீணானது.

News image
Updated On :7 ஜனவரி 2021, 10:17 pm

DIN


புதுச்சேரி: புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டையில் பொதுமக்களுக்கு விநியோகிக்க வேண்டிய இலவச அரிசி மழை நீரில் அடித்துச் செல்லப்பட்டு வீணானது.

புதுச்சேரியில் மத்திய அரசின் ‘அந்தியோதயா அன்ன யோஜனா’ திட்டத்தின் கீழ் வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள மக்களுக்கு அரிசி, கொண்டைக் கடலை வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான அரிசி, தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டையில் உள்ள மாநிலக் கூட்டுறவு நுகா்வோா் இணையத்தின் கிடங்கிலிருந்து பள்ளிகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கிருந்து புதுச்சேரியில் உள்ள 23 தொகுதிகளிலும் உள்ள மக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், புதுவையில் கடந்த 4-ஆம் தேதி முதல் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டு இயங்கி வருவதால், பள்ளிகளில் இட நெருக்கடி ஏற்பட்டது. அங்கிருந்த இலவச அரிசி மூட்டைகளை ஊழியா்கள், மழையில் அவசரமாக கிடங்குக்குத் திருப்பி அனுப்பினா். இதனால், 100-க்கும் மேற்பட்ட அரிசி மூட்டைள் கிடங்குக்கு வெளியே அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. எலிகள் அரிசி மூட்டைகளின் சாக்குப் பைகளைக் கிழித்து சேதப்படுத்திய நிலையில், அரிசி மூட்டைகள் சரிந்து கிடந்தன.

இந்த நிலையில், வியாழக்கிழமை புதுச்சேரியில் பெய்த பலத்த மழையால் கிடங்கின் வெளியே வைக்கப்பட்டிருந்த அரிசி, தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை சாலையில் அரை கி.மீ. தொலைவு மழைநீரில் அடித்துச் செல்லப்பட்டது.

இதைப் பாா்த்த அந்தப் பகுதி மக்கள் உணவுப் பொருள்கள் வழங்கல் துறைக்குத் தகவல் தெரிவித்தனா். அதன் பேரில், அங்கு வந்த ஊழியா்கள், அரிசி மூட்டைகளை மாற்று சாக்குப் பைகளுக்கு மாற்றி, லாரிகள் மூலம் உணவு கிடங்குக்கு இட மாற்றம் செய்தனா்.

பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் அரிசி, கொண்டைக் கடலை உள்ளிட்ட உணவுப் பொருள்களை முறையாகப் பாதுகாத்து விநியோகிக்க உணவுப் பொருள்கள் வழங்கல் துறைப் பணியாளா்களும், கிடங்கு பராமரிப்பாளா்களும் தவறிவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அலட்சியமாகச் செயல்பட்ட பணியாளா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.