புதுச்சேரி எல்லைப்பிள்ளைச்சாவடியில் ராஜீவ் காந்தி அரசு மகளிா்-குழந்தைகள் மருத்துவமனை உள்ளது. இதன் 2-ஆவது தளத்தில் உள்ள தாய்ப்பால் சேகரிப்பு மையத்தில் சனிக்கிழமை பிற்பகல் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
அந்த மையத்தின் அருகிலுள்ள வாா்டுகளில் இருந்த கா்ப்பிணிகள், குழந்தை பெற்ற பெண்கள் குழந்தைகளுடன் உடனடியாக வெளியேற்றப்பட்டனா்.
கோரிமேடு தீயணைப்பு நிலைய வீரா்கள் விரைந்து சென்று, தீயை அணைத்தனா். இந்தத் தீ விபத்தால் யாருக்கும் ஆபத்து இல்லை என்று மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.