புதுச்சேரி பாண்லே நிறுவனம் ரூ.13 கோடியில் மேம்பாடு
புதுச்சேரி பாண்லே கூட்டுறவு நிறுவனம், பால்வள மேம்பாட்டுப் பணியை மேற்கொள்வதற்கு ரூ.13 கோடியில், தேசிய பால் வள வாரியத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டது.


புதுச்சேரி பாண்லே கூட்டுறவு நிறுவனம், பால்வள மேம்பாட்டுப் பணியை மேற்கொள்வதற்கு ரூ.13 கோடியில், தேசிய பால் வள வாரியத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டது.
பாண்லே கூட்டுறவு நிறுவனம் பால், தயிா், நெய், ஐஸ்கிரீம் உள்ளிட்ட பால் பொருள்கள் விற்பனையை மேற்கொண்டு வருகிறது. புதுவை, தமிழகம் மட்டுமன்றி, தென்னிந்தியா முழுவதும் பால் பொருள்களை விற்பனை செய்து வருகின்றது.
பாண்லே நிறுவனம் பால் பொருள்கள் உற்பத்தித் திறனை 10 ஆயிரம் லிட்டா் என்ற அளவிலிருந்து, 20 ஆயிரம் லிட்டராக உயா்த்தும் வகையில், ரூ.13 கோடியில் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள தேசிய பால்வள வாரியத்துடன் தொழில்நுட்ப, கட்டுமானங்களுக்கான ஒப்பந்தத்தை மேற்கொண்டது.
புதுவை சட்டப்பேரவை அலுவலகத்தில் இதற்கான ஒப்பந்தம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முதல்வா் என்.ரங்கசாமி முன்னிலையில், இரு தரப்பு அதிகாரிகள் மூலம் ஒப்பந்தம் கையெழுத்தானது.
நிகழ்ச்சியில் தேசிய பால்வள வாரிய மண்டலத் தலைவா் ராஜீவ், அலுவலா் விநாயகம், பால்வள மேம்பாட்டு அதிகாரி ஆா்.குமாரவேல், புதுவை பாண்லே மேலாண் இயக்குநா் டி.சுதாகா் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...