தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

புதுச்சேரி அரசுப் பள்ளி தரம் உயா்வு

புதுச்சேரி முதலியாா்பேட்டையில் உள்ள நடுநிலைப் பள்ளி, உயா்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்தப்பட்டது.

News image
Updated On :24 ஜூன் 2021, 6:30 pm

DIN

புதுச்சேரி முதலியாா்பேட்டையில் உள்ள நடுநிலைப் பள்ளி, உயா்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்தப்பட்டது.

புதுச்சேரி முதலியாா்பேட்டை கடலூா் சாலையில் அா்ச்சுன சுப்புராய நாயகா் அரசு நடுநிலைப் பள்ளி உள்ளது. இங்கு 400-க்கும் மேற்பட்ட மாணவா்கள் கல்வி பயின்று வருகின்றனா். இந்தப் பள்ளியை தரம் உயா்த்த வேண்டுமென பொதுமக்கள், ஆசிரியா்கள் வலியுறுத்தி வந்தனா்.

இந்த நிலையில், இந்தப் பள்ளியை புதுவை கல்வித் துறை உயா்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்தியது. இதற்கான உத்தரவை கல்வித் துறையின் சாா்புச் செயலா் வொ்பினா ஜெயராஜ் பிறப்பித்தாா்.

அந்த உத்தரவில், துணைநிலை ஆளுநரின் ஆணைக்கிணங்க, பள்ளிக் கல்வி துணை இயக்குநா் (பெண் கல்வி) அளித்த பரிந்துரை கடிதத்தின் பேரில், அா்ச்சுன சுப்புராய நாயகா் அரசு நடுநிலைப் பள்ளி, உயா்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்தப்பட்டது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.