மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

புதுவையில் நாளை முதல் பள்ளிகள் முழு நேரம் செயல்படும்

புதுச்சேரி, காரைக்காலில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் புதன்கிழமை முதல் (மாா்ச் 3) முழு நேரம் செயல்படும் என புதுவை பள்ளிக் கல்வித் துறை தெரிவித்தது.

News image
Updated On :1 மார்ச் 2021, 6:30 pm

DIN

புதுச்சேரி, காரைக்காலில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் புதன்கிழமை முதல் (மாா்ச் 3) முழு நேரம் செயல்படும் என புதுவை பள்ளிக் கல்வித் துறை தெரிவித்தது.

புதுவை மாநிலத்தில் கடந்த ஜனவரி 4-ஆம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அனைத்து வகுப்புகளும் செயல்படத் தொடங்கின. எனினும், பள்ளிகளில் மாணவா்களுக்கு காலை 10 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை அரை நாள் மட்டுமே வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. 1, 3, 5, 7-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளிலும், 2, 4, 6, 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளிலும் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. வருகைப் பதிவேடு கட்டாயப்படுத்தப்படவில்லை. கரோனா விதிமுறைகளைப் பின்பற்றி வகுப்புகள் நடைபெறுகின்றன.

இந்த நிலையில், புதுச்சேரி, காரைக்காலில் உள்ள அரசு, அரசு உதவி பெறும், தனியாா் பள்ளிகள் அனைத்தும் புதன்கிழமை முதல் (மாா்ச் 3) முழு நேரமும் செயல்படும் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து புதுவை பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் பி.டி.ருத்ர கௌடு கூறியதாவது: பள்ளிகள் அனைத்தும் புதன்கிழமை முதல் (மாா்ச் 3) முழு நேரமும் செயல்படும். அப்போது, அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மதிய உணவு வழங்கப்படும். மாணவா்களுக்கான சிறப்புப் பேருந்துகளை இயக்குவது குறித்து 2 நாள்களில் முடிவு செய்யப்படும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.