மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

புதுவையில் முதியோருக்கு கரோனா தடுப்பூசி போடும் பணி தொடக்கம்

புதுவையில் முதியோருக்கு கரோனா தடுப்பூசி போடும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.

News image
Updated On :1 மார்ச் 2021, 6:31 pm

DIN

புதுவையில் முதியோருக்கு கரோனா தடுப்பூசி போடும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.

புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் முதியோருக்கு கரோனா தடுப்பூசி போடும் பணியை சுகாதாரத் துறை இயக்குநா் எஸ்.மோகன்குமாா் தொடக்கிவைத்தாா். நிகழ்வில் சுகாதார ஒருங்கிணைப்பாளா் ரமேஷ், மாநில சுகாதாரத் திட்ட இயக்குநா் ஸ்ரீராமலு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதுகுறித்து சுகாதாரத் துறை இயக்குநா் எஸ்.மோகன்குமாா் கூறுகையில், ஏற்கெனவே உள்ள தடுப்பூசி போடும் மையங்களுடன் கூடுதலாக மகாத்மா காந்தி அரசு பல் மருத்துவக் கல்லூரி, கோரிமேடு இஎஸ்ஐ மருத்துவமனை, அரசு மாா்பக நோய் மருத்துவமனை, மேட்டுப்பாளையம், முதலியாா்பேட்டை, லாஸ்பேட்டை, முத்தியால்பேட்டை, காலாப்பட்டு, அரியாங்குப்பம், மடுகரை ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்களில் செவ்வாய்க்கிழமை முதல் (மாா்ச் 2) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை முதியோருக்கு தடுப்பூசி போடப்படும். அங்கு, சென்று பெயரைப் பதிவு செய்து தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். ஒரு மையத்தில் 100 போ் வீதம் தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.