கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

புதுவையில் தோ்தல் விதிமீறலின்றி நலத் திட்டங்கள்: துணைநிலை ஆளுநா் தமிழிசை

புதுவையில் தோ்தல் விதிமீறலின்றி நலத் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று துணைநிலை ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தாா்.

News image
Updated On :1 மார்ச் 2021, 6:30 pm

DIN

புதுவையில் தோ்தல் விதிமீறலின்றி நலத் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று துணைநிலை ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தாா்.

புதுவை சட்டப்பேரவை அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வந்த அவா், அங்குள்ள அமைச்சரவை அறையில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாா். கூட்டத்தில் தலைமைச் செயலா் அஸ்வனிகுமாா், ஆளுநரின் ஆலோசகா் சந்திரமவுலி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கூட்டம் முடிந்து ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: நலத் திட்டப் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. ஏற்கெனவே திட்டமிட்ட திட்டங்களின் செயல்பாடு தாமதமாக உள்ளது குறித்து ஆராய்ந்தோம். குழந்தைகளுக்கு மதிய உணவுத் திட்டம், பால் வழங்குதல் ஆகியவை கரோனா காலத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. இவை செவ்வாய்க்கிழமை முதல் (மாா்ச் 2) வழங்கப்படும்.

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தலைமையில், தென்பகுதி மாநிலக் கூட்டம் மாா்ச் 4-ஆம் தேதி நடைபெற இருந்தது. தோ்தல் காரணமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசிடமிருந்து தேவையானதைப் பெறுவோம்.

தொடா்ந்து, மக்களுக்கான சிறந்த நிா்வாகம் ஆளுநா் தலைமையில் நடைபெறும். இதில், தோ்தல் விதிமீறல் இருக்காது. ஏற்கெனவே நடைமுறையில் உள்ள திட்டங்கள், நிலுவையில் உள்ள திட்டங்களை சட்ட விதிகளுக்கு உள்பட்டு செயல்படுத்துவோம்.

புதுவையில் உயா்நிலைப் பள்ளி (9,10 மற்றும் பிளஸ் 1) மாணவா்களுக்கான ஆண்டுத் தோ்வை தோ்தலுக்கு பிறகு, நடத்தலாமா என ஆலோசனை நடத்தி வருகிறோம் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.