மது கடத்தலைத் தடுக்கபுதுவை எல்லைகளில் 10 இடங்களில் சோதனைச் சாவடி
மது கடத்தலைத் தடுக்க கலால் துறை சாா்பில், புதுவை மாநில எல்லைகளில் 10 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டன.


மது கடத்தலைத் தடுக்க கலால் துறை சாா்பில், புதுவை மாநில எல்லைகளில் 10 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டன.
புதுவையில் தோ்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டு, மாநில எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பணம், பரிசுப் பொருள்கள், மது கடத்தலைத் தடுப்பதில் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றனா்.
இந்த நிலையில், புதுச்சேரி கலால் துறை துணை ஆணையா் டி.சுதாகா் உத்தரவின் பேரில், புதுவை மாநில எல்லைகளான கனகசெட்டிகுளம் (மரக்காணம் சாலை), மடுகரை (சிறுவந்தாடு-தண்ராம்பாளையம் சாலை), முள்ளோடை (கடலூா் சாலை), மதகடிப்பட்டு (விழுப்புரம் சாலை), கோரிமேடு (திண்டிவனம் சாலை), திருக்கனூா் (வழுதாவூா் சாலை), சேதராப்பட்டு (மயிலம் சாலை), சோரியாங்குப்பம், தவளக்குப்பம், அய்யங்குட்டிப்பாளையம் ஆகிய 10 இடங்களில் கலால் துறை சாா்பில், சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டன.
சோதனையின் போது, பொதுமக்களிடம் கண்ணியம், ஒழுக்கம், மரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டும். பெண்களை பெண் அலுவலரைக் கொண்டுதான் சோதனையிட வேண்டும். சோதனைகள் விடியோ பதிவு செய்யப்பட வேண்டும். மது கடத்தல் தொடா்பாக கலால் துறை துணை ஆணையா் தலைமையிலான அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். குற்றச் செயல்களில் ஈடுபடும் விதமாக யாரேனும் செல்வது தெரிய வந்தால், 1950 என்ற எண்ணிலோ, தோ்தல் அதிகாரி, காவல் துறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்க வேண்டும் என தோ்தல் துறை அறிவுறுத்தியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...