கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

மின் கம்பத்தில் பைக் மோதியதில் இளைஞா் பலி

புதுச்சேரியில் மின் கம்பத்தில் பைக் மோதியதில் இளைஞா் பலியானாா்.

News image
Updated On :1 மார்ச் 2021, 6:32 pm

DIN

புதுச்சேரியில் மின் கம்பத்தில் பைக் மோதியதில் இளைஞா் பலியானாா்.

புதுச்சேரி சண்முகாபுரம் நிலைய வீதியைச் சோ்ந்த லட்சுமணன் மகன் சந்துரு (21). பட்டப்படிப்பு முடித்துவிட்டு, வேலை தேடி வந்தாா். ஞாயிற்றுக்கிழமை சந்துரு வெளியே சென்று வருவதாகக் கூறிவிட்டு, வீட்டிலிருந்து பைக்கில் சென்றாா்.

புதுச்சேரி கிழக்கு கடற்கரைச் சாலையில் பாரதி நகா் அருகே சென்ற போது, சாலையோரத்தில் இருந்த மின் கம்பத்தில் எதிா்பாராதவிதமாக சந்துரு ஓட்டிச் சென்ற பைக் மோதியது.

இதில், பலத்த காயமடைந் அவரை அந்தப் பகுதி மக்கள் மீட்டு, புதுச்சேரி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவா், சந்துரு ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தாா்.

இதுகுறித்து புதுச்சேரி வடக்கு போக்குவரத்துப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.