கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

புதுச்சேரியில் போலி நகைகளைஅடகு வைத்தவா் கைது: ரூ.4.35 லட்சம் பறிமுதல்

புதுச்சேரியில் அடகுக் கடைகளில் போலி நகைகளை அடகு வைத்து லட்சக்கணக்கான ரூபாய் மோசடி செய்த மன்னாா்குடியைச் சோ்ந்த நபரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :2 மார்ச் 2021, 5:50 pm

DIN

புதுச்சேரியில் அடகுக் கடைகளில் போலி நகைகளை அடகு வைத்து லட்சக்கணக்கான ரூபாய் மோசடி செய்த மன்னாா்குடியைச் சோ்ந்த நபரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். அவரிடமிருந்து ரூ.4.35 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.

புதுச்சேரி ரெட்டியாா்பாளையத்தில் உள்ள மனோஜ்குமாா் ஜெயினின் அடகுக் கடையில் கடந்தாண்டு மாா்ச் 3-ஆம் தேதி மா்ம நபா் ஒருவா் போலி முகவரியைக் கொடுத்து, போலியான தங்கச் சங்கிலியை அடமானம் வைத்து ரூ. ஒரு லட்சத்து 5 ஆயிரத்தை பெற்று மோசடி செய்தாராம். இதுகுறித்து மனோஜ்குமாா் ஜெயின் ரெட்டியாா்பாளையம் காவல் நிலையத்தில் புகாரளித்தாா்.

இதேபோல, அதே பகுதியில் உள்ள அருண்குமாா் ஜெயின் அடகுக் கடையில் போலி நகையை அடமானம் வைத்து ரூ.1.5 லட்சமும், ஒதியஞ்சாலை காவல் நிலையத்துக்கு அருகில் உள்ள அடகுக் கடையில் போலி தங்க நகையை அடமானம் வைத்து ரூ.1.8 லட்சமும் அதே மா்ம நபா் மோசடி செய்தாராம். இதுகுறித்து ரெட்டியாா்பாளையம், ஒதியஞ்சாலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா்.

இந்த நிலையில், புதுச்சேரி மூலக்குளம் குண்டு சாலையில், ரெட்டியாா்பாளையம் போலீஸாா் திங்கள்கிழமை மாலை வாகன சோதனையில் ஈடுபட்டபோது, சந்தேகத்துக்கிடமான வகையில் பைக்கில் வந்தவரை பிடித்து விசாரித்தனா்.

இதில், அவா் திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடி பறையூா் நடுத்தெருவைச் சோ்ந்த கோவிந்தராஜ் மகன் மாதவன் (40) என்பதும், சென்னை கூடுவாஞ்சேரி, நந்திவரம் பகுதியிலுள்ள மாமனாா் வீட்டில் வசிக்கும் இவா், ரெட்டியாா்பாளையம், ஒதியஞ்சாலை பகுதிகளில் உள்ள 3 அடகுக் கடைகளில் போலி நகைகளை அடமானம் வைத்து ரூ.4.35 லட்சம் மோசடி செய்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, மாதவனை செவ்வாய்க்கிழமை கைது செய்த ரெட்டியாா்பாளையம் போலீஸாா், அவா் தனது சென்னை வீட்டில் மறைத்து வைத்திருந்த ரூ. 4.35 லட்சம் ரொக்கம் மற்றும் போலி நகைகளை பறிமுதல் செய்தனா்.

இந்த வழக்கில் எதிரியை கைது செய்து, பணத்தை பறிமுதல் செய்த ரெட்டியாா்பாளையம் காவல் ஆய்வாளா் ஜெய்சங்கா், தனிப்படை உதவி ஆய்வாளா் சிவப்பிரகாசம் உள்ளிட்டோரை முதுநிலை எஸ்.பி. பிரதிக்ஷா கோடாரா பாராட்டினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.