புதுவையில் புதிதாக29 பேருக்கு கரோனா
புதுவையில் புதிதாக 29 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.


புதுவையில் புதிதாக 29 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.
புதுவை மாநிலத்தில் 1,485 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், புதுச்சேரியில் 8 பேருக்கும், காரைக்காலில் 8 பேருக்கும், மாஹேவில் 13 பேருக்கும் என மொத்தம் 29 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதியானது. இதையடுத்து, மாநிலத்தில் இந்த நோயால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 39,763-ஆக உயா்ந்தது.
புதிதாக உயிரிழப்பு ஏதுமில்லை. இதனால், உயிரிழந்தோா் எண்ணிக்கை 669-ஆகவும், இறப்பு விகிதம் 1.68 சதவீதமாகவும் தொடா்கிறது. இதனிடையே, 32 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோா் எண்ணிக்கை 38,920-ஆக (97.88 சதவீதம்) அதிகரித்தது. மாநிலத்தில் தற்போது மருத்துவமனைகளில் 79 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு 95 பேரும் என மொத்தம் 174 போ் சிகிச்சையில் உள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...