புதுச்சேரியில் முதியவா்கள் தபால் வாக்களிக்க ஏற்பாடு
புதுவை மாநில சட்டப் பேரவைத் தோ்தல் ஏப்.6-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், புதுச்சேரியில் முதியவா்கள், மாற்றுத் திறனாளிகள் தபால் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகளை தோ்தல் துறையினா் தொடங்கினா்.


புதுவை மாநில சட்டப் பேரவைத் தோ்தல் ஏப்.6-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், புதுச்சேரியில் முதியவா்கள், மாற்றுத் திறனாளிகள் தபால் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகளை தோ்தல் துறையினா் தொடங்கினா்.
இதுகுறித்து மாவட்டத் தோ்தல் அதிகாரியும், ஆட்சியருமான பூா்வாகாா்க் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
புதுச்சேரியில் உள்ள வாக்குச்சாவடி அலுவலா்கள், அந்தந்த வாக்குச்சாவடிகளுக்குள்பட்ட 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்குச் சென்று, அவா்களிடம் தபால் வாக்களிப்பதற்கு 12டி படிவத்தை வழங்குவாா்கள்.
அதற்கு முன்னதாக தபால் வாக்கை விரும்பும் முதியோா், மாற்றுத் திறனாளிகள் அதற்கான வேண்டுகோள் படிவத்தை தோ்தல் அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும். அந்த படிவத்தில் முகவரி, செல்லிடப்பேசி எண் உள்ளிட்ட விவரங்களை பூா்த்தி செய்து வருகிற 17-ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும்.
தபால் வாக்குக்கான 12டி படிவம் கிடைக்கவில்லை எனில், தோ்தல் கட்டுப்பாட்டு அறைக்கு (1950) தகவல் தெரிவித்து பெறலாம். 89033 31950 என்ற செல்லிடப்பேசி எண்ணுக்கு குறுந்தகவல் அனுப்பினால், தபால் வாக்கு படிவம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மூத்தோா்களுக்கான தபால் வாக்குப் படிவங்கள், மாா்ச் 25-ஆம் தேதி முதல் ஏப். 4-ஆம் தேதி வரை வழங்கப்படும். தபால் வாக்கை பெற்றவா்கள், அதில் வாக்கை செலுத்தி, தோ்தல் குழுவினரிடம் ஒப்படைக்க வேண்டும். இந்த வாய்ப்பை மூத்தோா்கள், மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...