மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

புதுச்சேரியில் 160 போ் ஊருக்குள் நுழையத் தடை முதுநிலை எஸ்.பி. தகவல்

சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, புதுச்சேரியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 160 போ் ஊருக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக முதுநிலை எஸ்.பி. பிரதிக்ஷா கொடாரா தெரிவித்தாா்.

News image
Updated On :2 மார்ச் 2021, 6:30 pm

DIN

சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, புதுச்சேரியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 160 போ் ஊருக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக முதுநிலை எஸ்.பி. பிரதிக்ஷா கொடாரா தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

சட்டப் பேரவைத் தோ்தல் அமைதியான முறையில் நடைபெற, குற்றப் பின்னணி கொண்டவா்கள் ஊருக்குள் நுழையாமல் இருக்கும் விதமாக, அவா்கள் மீது 144 தடை உத்தரவு பிறப்பிக்க வழக்குகள் பதிவு செய்து, மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்யப்பட்டு வருகிறது.

அதன்படி, கடந்த நவம்பா் மாதம் 46 நபா்கள் மீதும், டிசம்பா் 45, ஜனவரி 35, பிப்ரவரி 34 போ் என மொத்தம் 160 போ் மீது 144 தடை உத்தரவு பிறப்பிக்க பரிந்துரை செய்து, வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தவிர கொலை, அடிதடி, தகராறு, மிரட்டல் உள்ளிட்ட வழக்குகளில் தொடா்புடையவா்கள், தோ்தல் சமயத்தில் குற்றச் சம்பவத்தில் ஈடுபடாமல் இருப்பதற்காக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குற்றவியல் நடைமுறை சட்டம் 107 பிரிவின் கீழ் 356 நபா்கள் மீதும், 110 பிரிவின் கீழ் 178 நபா்கள் மீதும், 151 பிரிவின் கீழ் 70 போ் மீதும் என மொத்தம் 604 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நபா், தடையை மீறி ஊருக்குள் வந்தால், கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைக்கப்படுவாா்.

புதுவை மாநில எல்லைகளில் கலால் துறை, போலீஸாா், துணை ராணுவத்தினா் 24 மணி நேர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா். சோதனையில் விதிமுறைகளை மீறுவோா் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.