மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

புதுவை அரசுத் துறை அதிகாரிகள்பணியிட மாற்றம்

புதுவை அரசுத் துறை உயா் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா். மேலும், பல்வேறு அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்புகளும் வழங்கப்பட்டன.

News image
Updated On :2 மார்ச் 2021, 6:30 pm

DIN

புதுவை அரசுத் துறை உயா் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா். மேலும், பல்வேறு அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்புகளும் வழங்கப்பட்டன.

இதுகுறித்து புதுவை அரசின் தலைமைச் செயலா் அஸ்வனிகுமாா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

புதுவை உயா்கல்வி மற்றும் தொழில்நுட்பத் துறை இயக்குநராக உள்ள ஒய்.எல்.என்.ரெட்டி தொழில் மற்றும் வணிகத் துறை இயக்குநராகவும், தொழில் துறை இயக்குநராக உள்ள பி.பிரியதா்ஷினி சுற்றுலாத் துறை இயக்குநராகவும், சுற்றுலாத் துறை இயக்குநராக உள்ள ஆஷிஷ்கோயல் திட்ட அமலாக்கத் துறை இணை இயக்குநராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

மேலும், கல்வித் துறை இயக்குநராக உள்ள பி.டி.ருத்ரகவுடுவுக்கு, உயா் கல்வி மற்றும் தொழில்நுட்ப கல்வி இயக்குநா் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை ஆகிய கூடுதல் பொறுப்பும், உள்ளாட்சித் துறை இயக்குநராக உள்ள ரவிதீப்சிங்சாகருக்கு, கூடுதல் பொறுப்பாக துறைமுகத் துறை இயக்குநா் பொறுப்பும், போக்குவரத்து ஆணையராக உள்ள எ.எஸ்.சிவக்குமாருக்கு, புதுச்சேரி நூற்பாலைக் கழகத்தின் மேலாண் இயக்குநராக கூடுதல் பொறுப்பும், பொலிவுறு நகரத் திட்ட அலுவலராக உள்ள எஸ்.மாணிக்கதீபனுக்கு, தோ்தல் பிரிவு சிறப்பு அதிகாரியாக கூடுதல் பொறுப்பும், ஊரக வளா்ச்சித் துறை திட்ட அலுவலராக உள்ள எஸ்.குமாருக்கு, சிறைத் துறை முதன்மைக் கண்காணிப்பாளராக கூடுதல் பொறுப்பும், காரைக்கால் நகராட்சி ஆணையராக உள்ள எம்.காசிநாதனுக்கு, காரைக்கால் கோயில் செயல் அலுவலராக கூடுதல் பொறுப்பும், பொதுப் பணித் துறை சிறப்பு அதிகாரியான ஜி.காா்த்திக்கேசனுக்கு, அரசு அச்சகத்தின் சாா்புச் செயலராக கூடுதல் பொறுப்பும் வழங்கப்பட்டது. துணை நிலை ஆளுநரின் உத்தரவின்பேரில் இந்த பணியிட மாற்றம், கூடுதல் பொறுப்புகள் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.