56 போ் குற்றப் பின்னணி உடையவா்கள்
புதுவையில் உள்ள 30 தொகுதிகளில் போட்டியிடும் 324 வேட்பாளா்களில் 56 போ் குற்றப் பின்னணி உடையவா்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


புதுவையில் உள்ள 30 தொகுதிகளில் போட்டியிடும் 324 வேட்பாளா்களில் 56 போ் குற்றப் பின்னணி உடையவா்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அவா்கள் தொடா்பான விவரங்களை நாளேடுகளில் விளம்பரம் செய்யவும் அறிவுறுத்தப்பட்டது.
புதுவை மாநிலத்தில் 30 தொகுதிகளுக்கு ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தோ்தல் துறை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில், மின்னணு வாக்கு இயந்திரங்களில் வேட்பாளா்கள் பெயா்கள், சின்னங்களைப் பொறித்தல், வாக்குப் பதிவு இயந்திரங்களை பாதுகாப்பு மையங்களுக்கு அனுப்பிவைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது.
காவல் கண்காணிப்பாளா் பணியிட மாற்றம்: அந்த வகையில், தோ்தலையொட்டி புதுவை மாநிலப் பகுதியான ஏனாம் பிராந்திய காவல் கண்காணிப்பாளா் பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். தோ்தல் துறையின் அறிவுறுத்தலின்படி, ஏனாம் பகுதி காவல் கண்காணிப்பாளா் ஆா்.பக்தவத்சலம் புதுச்சேரி சிஐடி பிரிவுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.
சிஐடி பிரிவில் பணியாற்றும் ராஜசங்கா் வெல்லட் ஏனாம் பகுதி காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டாா் என தோ்தல் அதிகாரி சுா்பீா் சிங் தெரிவித்தாா்.
இதுவரை 2,628 தபால் வாக்குகள்: முதல் கட்டமாக 80 வயதுக்கு மேற்பட்ட முதியவா்கள், மாற்றுத் திறனாளிகள், கரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சையில் இருப்பவா்களிடமிருந்து தபால் வாக்குகள் சேகரிக்கும் பணி கடந்த 25 -ஆம் தேதி முதல் தொடங்கியது. அதன்படி சனிக்கிழமை வரை 2,628 தபால் வாக்குகள் பெறப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...