பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

புதுச்சேரி விடுதலை நாள் விழா: தேசியக் கொடியேற்றினார் முதல்வர் என்.ரங்கசாமி  

புதுச்சேரி விடுதலை நாள் விழாவை முன்னிட்டு முதல்வர் என்.ரங்கசாமி தேசியக் கொடியேற்றினார்.

News image
தேசியக் கொடியை ஏற்றுகிறார் முதல்வர் என்.ரங்கசாமி.
Updated On :1 நவம்பர் 2021, 5:08 am

DIN

புதுச்சேரி விடுதலை நாள் விழாவை முன்னிட்டு முதல்வர் என்.ரங்கசாமி தேசியக் கொடியேற்றினார்.

நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பாக பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்த புதுச்சேரி யூனியன் பிரதேசம், முறையாக கடந்த 1954ம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி விடுவிக்கப்பட்டு, இந்திய அரசுடன் இணைந்தது. இந்த நாளை ஆண்டுதோறும் புதுச்சேரி விடுதலை நாள் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த வகையில் நிகழாண்டு புதுச்சேரி கடற்கரை சாலையில் விடுதலை நாள் விழா திங்கள்கிழமை காலை நடைபெற்றது. முதல்வர் என்.ரங்கசாமி தலைமை வகித்து தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.  இதனைத் தொடர்ந்து காவல்துறையினர், தேசிய மாணவர் படையினர் உள்ளிட்டோரின் அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டு முதல்வர் ஏற்றார்.

இதனைத்தொடர்ந்து முதல்வர் என். ரங்கசாமி விடுதலை நாள் விழா உரையாற்றினார். இந்த விழாவில் புதுவை சட்டப்பேரவை தலைவர் ஆர். செல்வம், எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சிவா, அமைச்சர்கள் ஏ நமச்சிவாயம், சாய் ஜெ. சரவணகுமார் மற்றும் எம்எல்ஏக்கள், தலைமைச் செயலாளர் அஸ்வனி குமார் உள்ளிட்ட அதிகாரிகள், தியாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.