அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

புதுவையில் உள்ளாட்சித் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும்: ஆளுநரிடம் பேரவைத் தலைவர் தலைமையிலான எம்எல்ஏக்கள் மனு

புதுவையில் உள்ளாட்சித் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என பேரவைத் தலைவர் தலைமையிலான எம்எல்ஏக்கள் ஆளுநரை சந்தித்து மனு அளித்தனர்.

News image
ஆளுநரை சந்தித்து மனு அளித்த பேரவைத் தலைவர் தலைமையிலான எம்எல்ஏக்கள்.
Updated On :9 அக்டோபர் 2021, 11:48 am

DIN

புதுவையில் உள்ளாட்சித் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என பேரவைத் தலைவர் தலைமையிலான எம்எல்ஏக்கள் ஆளுநரை சந்தித்து மனு அளித்தனர்.

புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் மூன்று கட்டமாக நடைபெறும் என புதுச்சேரி தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. பண்டிகை காலங்கள் மற்றும் இட ஒதுக்கீடு உள்ளிட்ட குளறுபடிகள் உடன் தேர்தல் நடைபெறவுள்ளதாக பல்வேறு அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டின. இதனை தொடர்ந்து புதுச்சேரி சட்டப்பேரவை தலைவர் செல்வம் தலைமையில் அனைத்துக்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் சட்டப்பேரவை வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் புதுச்சேரி நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து சட்டத்தின்படி பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு அளிக்காமலும், சுழற்சி முறை மாற்றம் அளிக்காமலும் உள்ளாட்சித் தேர்தலை நடத்தக் கூடாது, 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தொகுதி வரையறைகள் தீர்மானிக்கப்பட வேண்டும்.  பிற்றபடுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு இடஒதுக்கீட்டை புறக்கணித்து மாநில தேர்தல் ஆணையம் தேர்தல் அறிவித்து இருப்பது சட்ட விரோதம், சமூக நீதிக்கு எதிரான மாநில தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்,

மழைக்காலம், விடுதலை நாள், கல்லறைத் திருநாள், தீபாவளி போன்ற திருவிழாக் காலங்களின் இடையில் தேர்தல் நடத்துவது நடைமுறைக்கு விரோதமானது, நீதிமன்ற வழிகாட்டுதல்களுக்கு எதிராக அறிவிக்கப்பட்டுள்ள தேர்தலை அனைவரும் புறக்கணிக்க வேண்டிய சூழல் உருவாகி உள்ளதால், இதில் உள்ள குளறுபடிகளை நீக்கி தேர்தலை நடத்த வேண்டும் என்றும், இந்த தேர்தல் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என்றும் தன்னிச்கையாகவும் விரோதமாகவும் முடிவுகளை எடுக்கும் மாநிலத் தேர்தல் ஆணையர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 இதனை தொடர்ந்து அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் துணை நிலை ஆளுநரை சந்தித்தனர். புதுச்சேரி மக்களுக்கு எதிராக நடைபெறவுள்ள உள்ளாட்சித்தேர்தலை கண்டித்து, துணை நிலை ஆளுநரை சந்தித்து மனு அளித்துள்ளோம் என்றும், உள்ளாட்சி தேர்தல் நடைமுறையை தவிர்த்து அறிவிக்கப்பட்டுள்ள தேர்தலை கண்டித்தும், பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கிய பின்பு தான் தேர்தல் நடத்த வேண்டும் என அனைத்துக்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டு மனு கொடுத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.