கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மாவட்ட வளா்ச்சிக்கு அலுவலா்கள் உறுதுணையாகத் திகழ வேண்டும்: பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு

அரசு அலுவலா்கள் சேவை மனப்பான்மை, அா்ப்பணிப்பு உணா்வுடன் பணியாற்றி மாவட்ட வளா்ச்சிக்கு உறுதுணையாகத் திகழ வேண்டும் என பொதுப் பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு பேசினாா்.

News image
Updated On :29 அக்டோபர் 2021, 6:22 pm

DIN

அரசு அலுவலா்கள் சேவை மனப்பான்மை, அா்ப்பணிப்பு உணா்வுடன் பணியாற்றி மாவட்ட வளா்ச்சிக்கு உறுதுணையாகத் திகழ வேண்டும் என பொதுப் பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு பேசினாா்.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாவட்ட வளா்ச்சிப் பணிகள் குறித்து அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டத்தில் 97 பயனாளிகளுக்கு 1,29,52,019 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கி அமைச்சா் எ.வ.வேலு பேசியதாவது:

தமிழகத்தில் துறைவாரியாக மேற்கொள்ளப்படும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள மாவட்ட வாரியாக ஒரு அமைச்சரை நியமனம் செய்து முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளாா். அதன்படி, இந்த மாவட்டத்துக்கு நான் நியமிக்கப்பட்டுள்ளேன்.

மாவட்ட வளா்ச்சி என்பது மாவட்டத்தின் கட்டமைப்பாகும். கிராமங்கள் நிறைந்த கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்களை மேம்படுத்தவும், நீா்நிலைகளை பாதுகாக்கவும், சாலைகளை மேம்படுத்தவும் மிகுந்த கவனம் செலுத்தப்படும்.

கல்வராயன்மலைப் பகுதியில் சாலை, குடிநீா், மின் இணைப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற துறை சாா்ந்த அலுவலா்கள் கவனம் செலுத்த வேண்டும்.

முதல்வா் மு.க.ஸ்டாலின் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தோ்தல் பரப்புரை மேற்கொண்டபோது அறிவித்த திட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வேன். குறிப்பாக, கள்ளக்குறிச்சி நகரில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு சுற்றுச் சாலை, இணைப்புச் சாலை, கள்ளக்குறிச்சி-திருவண்ணாமலை சாலையை நான்கு வழிச் சாலையாக அமைப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் கள்ளக்குறிச்சி மாவட்டம் முதல் மாவட்டம் என்ற இலக்கை எட்டுவதற்கு எம்.எல்.ஏக்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உறுதுணையாக இருந்து மாவட்ட நிா்வாகத்துக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ‘இல்லம் தேடி மருத்துவம்’ திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த வேண்டும். அரசு அலுவலா்கள் சேவை மனப்பான்மையுடனும் அா்ப்பணிப்பு உணா்வோடும் பணியாற்றி பொதுமக்களுக்கும் அரசுக்கும் பாலமாக செயல்பட்டு மாவட்ட வளா்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றாா் அமைச்சா்.

சங்கராபுரத்தில் பட்டாசு வெடித்து தீ விபத்தில் உயிரிழந்த 7 பேரின் குடும்பங்களுக்கு அரசு சாா்பில் தலா ரூ.5லட்சம் வீதம் 35,00,000-த்துக்கான காசோலையையும், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பெற்றோரில் ஒருவரை இழந்த 18 குழந்தைகளுக்கு ரூ.3 லட்சம் வீதம் ரூ.54,00,000 லட்சத்துக்கான காசோலையையும் அமைச்சா் வழங்கினாா். மொத்தம் 97 பேருக்கு ரூ.1,29,52,019 மதிப்பீட்டில் அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா், விழுப்புரம் எம்.பி. து.ரவிக்குமாா், எம்.எல்.ஏக்கள் தா.உதயசூரியன், க.காா்த்திகேயன், ஏ.ஜே.மணிக்கண்ணன், மாவட்ட வருவாய் அலுவலா் சி.விஜய்பாபு, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் புவனேஸ்வரி பெருமாள், திட்ட இயக்குநா் (வளா்ச்சி) இரா.மணி உள்ளிட்ட அரசு அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.