புதுவை மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு கூட்டணியிடம் வலியுறுத்துவோம்: அதிமுக மாநில செயலர் ஆ.அன்பழகன்
புதுவை மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு கூட்டணியிடம் வலியுறுத்துவோம் என்று அதிமுக மாநில செயலர் ஆ.அன்பழகன் தெரிவித்துள்ளார்.


புதுவை மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு கூட்டணியிடம் வலியுறுத்துவோம் என்று அதிமுக மாநில செயலர் ஆ.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து புதுவை அதிமுக கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது: புதுவையில் பொதுமக்கள் நம்பிக்கையின் பேரில் நிகழ் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா பாதுகாப்பாக கொண்டாடப்பட உள்ளது. பெரும்பான்மை மக்களின் கோரிக்கையை ஏற்று சிலைகள் வைத்து வழிபட அரசு அனுமதித்துள்ளது.
ஆனால் தற்போது விநாயகர் சிலை வைக்கக் கூடாது என, முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறி வருவதை அதிமுக வன்மையாகக் கண்டிக்கிறது. புதுவையில் மத ரீதியான பிரச்னை ஏற்படுத்தும் வகையில் அவர் தேவையில்லாத கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.
இதையும் படிக்க- தஞ்சாவூர் ஆட்சியரகத்தில் இளைஞர் தற்கொலை முயற்சி
புதுவையில் நடந்து முடிந்த சட்டப்பேரவை கூட்டத்தில் பல்வேறு நல்ல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை செயல்படுத்த ஓர் ஆண்டு காலம் அவகாசம் உள்ளது. ஆனால், நாராயணசாமி இந்த அறிவிப்புகளை 3 மாதத்தில் செயல்படுத்த வேண்டும் என கூறுகிறார். அவர் முதல்வராக இருந்த போது அவரது அறிவிப்புகள் 5 ஆண்டுகளாக செயல்படுத்தாமல் வெளியேறினார்.
6 மாத காலத்திற்கு நாராயணசாமி அமைதி காக்க வேண்டும். அவர் தேவையில்லாததை கூறி அரசை தவறான பாதைக்கு செல்ல வழி நடத்த வேண்டாம். புதுவை சட்டப்பேரவையில், மாநிலத்திற்கான வருவாய், செலவினங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் சரியாக விவாதிக்காமல், சட்டப்பேரவையில் பயன்படுத்தத் தவறி விட்டனர்.
புதுவை மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு, தேர்தல் தேதி அறிவித்த உடன் அந்த வாய்ப்பை பெற, அதிமுக தலைமையிடம் கூறி வலியுறுத்துவோம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...