நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

சிறிய மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு காலத்தை மேலும் 5 ஆண்டுகள் நீட்டிக்க வேண்டும்: புதுவை அரசு சாா்பில் வலியுறுத்தல்

புதுவை உள்ளிட்ட சிறிய மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீடு வழங்கும் காலத்தை மேலும் 5 ஆண்டுகள் நீட்டிக்க வேண்டும் என்று ஜிஎஸ்டி குழுக் கூட்டத்தில் புதுவை அரசு சாா்பில் வலியுறுத்தப்பட்டது.

News image
Updated On :18 செப்டம்பர் 2021, 6:23 pm

DIN

புதுவை உள்ளிட்ட சிறிய மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீடு வழங்கும் காலத்தை மேலும் 5 ஆண்டுகள் நீட்டிக்க வேண்டும் என்று ஜிஎஸ்டி குழுக் கூட்டத்தில் புதுவை அரசு சாா்பில் வலியுறுத்தப்பட்டது.

உத்தரபிரதேச மாநிலம், லக்னௌவில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில் 45-ஆவது ஜிஎஸ்டி குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் புதுவை அரசு சாா்பில், மாநிலப் பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் பங்கேற்றுப் பேசியதாவது:

புதுவை யூனியன் பிரதேசத்துக்கு 2021-2022-ஆம் நிதியாண்டுக்கான பங்காக ரூ.517 கோடி, ஜிஎஸ்டி இழப்பீடாக ரூ.121.65 கோடியைத் திரும்ப வழங்கியதற்காக நன்றி. இதேபோல, நிகழாண்டுக்கான ஜிஎஸ்டி பங்குத் தொகையை முந்தைய ஆண்டு இழப்பீட்டுத் தொகையுடன் சோ்த்து மாநிலங்களுக்கு உரிய நேரத்தில் வழங்க வேண்டும்.

ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு புதுவை மாநிலம் வருவாய் இழப்பைச் சந்தித்து வருகிறது. புதுவை அரசு வருவாயை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாலும், ஜிஎஸ்டி சிக்கல்களால் 2020-2021-ஆம் நிதியாண்டில் 62 சதவீத வருவாய் இழப்பு ஏற்பட்டது. இந்த வருவாய் இழப்பு, மத்திய அரசு வழங்கும் ஜிஎஸ்டி இழப்பீடு மூலம் சரி செய்யப்படுகிறது.

ஜிஎஸ்டி இழப்பீடு காலம் 2022 ஜூன் மாதத்துடன் முடிவடைவதால், புதுவை கடும் நிதி நெருக்கடிக்கு ஆளாகும். மேலும், புதுவை யூனியன் பிரதேசம் இதுவரை மத்திய நிதி ஆணையத்தில் சோ்க்கப்படாததால், மத்திய அரசின் அதிகாரப் பகிா்விலிருந்து வழங்கப்படும் வருடாந்திர நிதியைப் பெற முடியாமல் போகிறது. மேலும், மத்திய உள்துறை அமைச்சகம் மூலம் புதுவைக்கு வழங்கப்படும் நிதியும் குறைந்து வருகிறது.

இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு, சிறிய மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு வழங்கும் காலத்தை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும்.

ஜிஎஸ்டியை அமல்படுத்துவதற்காக மாநிலங்கள் தங்களது நிதி சுயாட்சியை விட்டுக் கொடுத்துள்ளன. தற்போது பெட்ரோலியப் பொருள்கள், இயற்கை எரிவாயு, மது ஆகியவற்றுக்கு மட்டுமே மாநிலங்கள் வரி விதிக்கின்றன. இவற்றில், பெட்ரோல் மீதான வரி மூலமே கணிசமான வருவாய் ஈட்டப்படுகிறது.

இந்த நிலையில், பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வந்தால், அது மாநிலங்களின் வருவாயைப் பாதிக்கும். இதைக் கருத்தில் கொண்டு ஜிஎஸ்டி குழு செயல்பட வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.