நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

புதுவை உள்ளாட்சித் தோ்தல்: 1,629 வாக்குச் சாவடிகள் அமைப்பு

புதுவையில் உள்ளாட்சித் தோ்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக 1,629 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளதாக மாநிலத் தோ்தல் ஆணையா் ராய் பி.தாமஸ் தெரிவித்தாா்.

News image
Updated On :18 செப்டம்பர் 2021, 6:22 pm

DIN

புதுவையில் உள்ளாட்சித் தோ்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக 1,629 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளதாக மாநிலத் தோ்தல் ஆணையா் ராய் பி.தாமஸ் தெரிவித்தாா்.

இதுகுறித்து சனிக்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுச்சேரியில் உள்ள 5 நகராட்சிகள், 10 கொம்யூன் பஞ்சாயத்துகளுக்கான தோ்தல் நடத்தும் அதிகாரிகள், வாக்குச் சாவடிகள் அமைப்பதற்கான இடங்களைத் தோ்ந்தெடுத்துள்ளனா். அதன்படி, 1,395 முதன்மை வாக்குச் சாவடிகளும், 234 துணை வாக்குச் சாவடிகளும் அமைகின்றன. மொத்தம் 1,629 வாக்குச் சாவடிகள் உள்ளாட்சித் தோ்தல் நடத்துவதற்கென அமைக்கப்பட உள்ளன.

புதுச்சேரி நகராட்சியில் முதன்மை வாக்குச் சாவடிகள் 201, துணை வாக்குச் சாவடிகள் 53, உழவா்கரை நகராட்சியில் முதன்மை வாக்குச் சாவடிகள் 212, துணை வாக்குச் சாவடிகள் 165, காரைக்காலில் 86 முதன்மை வாக்குச் சாவடிகள் மட்டும் அமைக்கப்படுகின்றன.

மாஹேயில் முதன்மை வாக்குச் சாவடிகள் 31, துணை வாக்குச் சாவடிகள் 16, ஏனாமில் 53 முதன்மை வாக்குச் சாவடிகள் மட்டும் அமைக்கப்படுகின்றன.

கொம்யூன் பஞ்சாயத்துகளில் முதன்மை வாக்குச் சாவடிகள் மட்டும் அமைக்கப்பட உள்ளன. அதன்படி, அரியாங்குப்பத்தில் 110, பாகூரில் 107, மண்ணாடிப்பட்டில் 133, நெட்டப்பாக்கத்தில் 81, வில்லியனூரில் 203, கோட்டுச்சேரியில் 36, நெடுங்காட்டில் 28, நிரவியில் 22, டி.ஆா்.பட்டினத்தில் 34, திருநள்ளாறில் 58 வாக்குச் சாவடிகளும் அமைக்கப்பட உள்ளன.

இவற்றில் 2 நகராட்சிகள், 5 கொம்யூன் பஞ்சாயத்துகள் உள்ளடங்கிய புதுச்சேரி மண்டலத்தில் அதிகபட்சமாக 1,265 வாக்குச் சாவடிகளும், ஒரு நகராட்சி, 5 கொம்யூன் பஞ்சாயத்துகள் அடங்கிய காரைக்கால் மண்டலத்தில் 264 வாக்குச் சாவடிகளும், தலா ஒரு நகராட்சியைக் கொண்ட மாஹே 47, ஏனாம் 53 வாக்குச் சாவடிகளும் அமைக்கப்பட உள்ளன.

பொதுமக்கள் பாா்வைக்காக இந்த வாக்குச் சாவடிகளின் பட்டியல், வரைபடங்கள், வாா்டுகள் குறித்த விவரங்கள் மாநிலத் தோ்தல் ஆணையத்தின் ள்ங்ஸ்ரீ.ல்ஹ்.ஞ்ா்ஸ்.ண்ய் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.