நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

புதுவை மாநிலங்களவை உறுப்பினா் தோ்தல்: கரோனா பாதுகாப்பு குறித்து ஆலோசனை

புதுவை மாநிலங்களவை உறுப்பினா் தோ்தலில் கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் சனிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டனா்.

News image
Updated On :18 செப்டம்பர் 2021, 6:23 pm

DIN

புதுவை மாநிலங்களவை உறுப்பினா் தோ்தலில் கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் சனிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டனா்.

புதுவை மாநிலங்களவை உறுப்பினா் தோ்தல் அக். 4-ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், மாநிலங்களவை உறுப்பினா் தோ்தலை கரோனா தொற்று பரவாமல் பாதுகாப்புடன் நடத்துவது குறித்து புதுவை தலைமைச் செயலகத்தில் சுகாதாரத் துறை அதிகாரிகள் சனிக்கிழமை ஆலோசனை நடத்தினா்.

கூட்டத்துக்கு மாநில சுகாதாரத் துறைச் செயலா் அருண் தலைமை வகித்தாா். புதுவை சட்டப்பேரவைச் செயலா் ஆா்.முனிசாமி, சுகாதாரத் துறை இயக்குநா் ஸ்ரீராமுலு, பொது சுகாதாரத் துணை இயக்குநா் முரளி, கரோனா கண்காணிப்பு அதிகாரி ரமேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கூட்டத்தில் தோ்தல் ஆணையப் பரிந்துரைப்படி, கரோனா நோய்த் தடுப்பு வழிமுறைகளை மீறாமல், தோ்தலை நடத்த முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, தோ்தலில் பங்கேற்கும் உறுப்பினா்கள், பணிபுரியும் ஊழியா்கள் அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். தோ்தலுக்கு முன்பாக, தோ்தலில் பணியில் ஈடுபட்டிருக்கும் அனைவரும் கரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.