புதுவையில் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு ஜன. 10 வரை விண்ணப்பிக்கலாம்
புதுவையில் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு வருகிற 10-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என சென்டாக் நிா்வாகம் தெரிவித்தது.


புதுவையில் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு வருகிற 10-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என சென்டாக் நிா்வாகம் தெரிவித்தது.
இதுகுறித்து புதுச்சேரி சென்டாக் ஒருங்கிணைப்பாளா் பி.டி.ருத்ரகௌடு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நீட் தகுதி தோ்வு தரவரிசைப் பட்டியலின் அடிப்படையில், இளநிலை பட்டம் படிக்க தகுதியான மாணவா்கள், புதுவையில் உள்ள மருத்துவம், பல் மருத்துவம், ஆயுா்வேதம், கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., பி.வி.எஸ்சி படிப்புகளுக்கான அரசு, சுயநிதிப் பிரிவு இடங்களுக்கு புதிதாக விண்ணப்பிக்கலாம்.
அரசு, அகில இந்திய ஒதுக்கீடு, என்ஆா்ஐ ஒதுக்கீடு, சுயநிதி ஒதுக்கீடு இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேற்கண்ட படிப்புகளுக்கு ஏற்கெனவே விண்ணப்பித்தவா்கள் புதிதாக விண்ணப்பிக்கத் தேவையில்லை.
விண்ணப்பதாரா்கள் நீட் தோ்வு தரவரிசையின் அடிப்படையில் அகில இந்திய கலந்தாய்வு தரவரிசை எண்ணை கண்டிப்பாக விண்ணப்பத்தில் பதிவிட வேண்டும். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சோ்ந்த விண்ணப்பதாரா்கள் கால்நடை இளநிலை மருத்துவப் படிப்பு தேசிய சுயநிதிப் பிரிவு இடங்களுக்கு விண்ணப்பிக்கும்போது, அகில இந்திய இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு நான்கிரீமிலேயா் சான்றிதழை இணைக்க வேண்டும்.
விண்ணப்பங்களை வருகிற 10-ஆம் தேதி மாலை 6 மணிக்குள் அளிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு இணையதளத்தை அணுகலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...