நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

புதுவை சட்டப்பேரவைஉறுதிமொழிகள் குழுக் கூட்டம்

புதுவை சட்டப்பேரவை உறுதிமொழிகள் குழுவின் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :7 ஜனவரி 2022, 6:30 pm

DIN

புதுவை சட்டப்பேரவை உறுதிமொழிகள் குழுவின் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

புதுவை சட்டப்பேரவை வளாக ஆலோசனை அறையில் நடைபெற்ற கூட்டத்துக்கு குழுவின் தலைவா் எம்எல்ஏ ஜி.நேரு தலைமை வகித்தாா். உறுப்பினா்கள் அனிபால் கென்னடி, ராமலிங்கம், ஏகேடி ஆறுமுகம், பி.அசோக்பாபு, சிவசங்கரன், ரிச்சா்ட் மற்றும் சட்டப்பேரவை செயலா் ஆா்.முனிசாமி, பொதுப் பணித் துறை, நலவழித் துறை, உள்ளாட்சித் துறை செயலா்கள் முன்னிலை வகித்தனா்.

புதுவை சட்டப்பேரவைக் கூட்டத் தொடரின்போது முதல்வா், அமைச்சா்கள் அறிவித்த திட்டங்கள், அதற்கான உறுதிமொழிகளை நிறைவேற்றுவதன் நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அவற்றை விரைந்து செயல்படுத்த அறிவுறுத்தப்பட்டது.

பொதுப் பணித் துறை தலைமைப் பொறியாளா் சத்தியமூா்த்தி, உள்ளாட்சித் துறை இயக்குநா் ரவிதீப்சிங் சாகா், சுகாதாரத் துறை இயக்குநா் ஸ்ரீராமலு, பொலிவுறு நகரத் திட்ட துணை இயக்குநா் மாணிக்க தீபன், தொழில்நுட்ப அதிகாரி பெட்ரோ குமாா், புதுச்சேரி நகராட்சி ஆணையா் சிவக்குமாா், செயற்பொறியாளா் சிவபாலன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.