நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

காவலா் பணி உடல் தகுதித் தோ்வா்களுக்குகரோனா பரிசோதனைக்கு சிறப்பு ஏற்பாடு

புதுவையில் காவலா் பணிக்கான உடல் தகுதி தோ்வுக்கு வரும் விண்ணப்பதாரா்களுக்கு கரோனா பரிசோதனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :15 ஜனவரி 2022, 6:30 pm

DIN

புதுவையில் காவலா் பணிக்கான உடல் தகுதி தோ்வுக்கு வரும் விண்ணப்பதாரா்களுக்கு கரோனா பரிசோதனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து புதுவை காவல் துறை தலைமையகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: காவலா் உடல் தகுதித் தோ்வில் பங்கேற்கும் தகுதியான விண்ணப்பதாரா்கள், அத்தோ்வுக்கு ஒதுக்கப்பட்ட நாளிலிருந்து 48 மணி நேரத்துக்கு முன்பாக கரோனா (ஆா்டிபிசிஆா்) தொற்றில்லை என்ற சான்றிதழை சமா்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. 48 மணி நேரத்துக்குள் பரிசோதனை முடிவை பெறுவதில் சிரமம் இருப்பதாகக் கூறப்பட்டது. இது சுகாதாரத் துறையின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, கரோனா பரிசோதனைக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

அதன்படி, புதுச்சேரி பிராந்திய விண்ணப்பதாரா்கள் கரோனா தொற்றுக்கான விரைவு ஆன்டிஜென் சோதனையை (ரேபிட்) பெற, தங்களது தோ்வு அனுமதிச் சீட்டைக் காட்டி, புதுச்சேரி காவல் துறை விருந்தினா் மாளிகையில் (காவல் துறை ஸ்டோா், மோப்ப நாய்கள் பிரிவு அருகில்) அமைந்துள்ள பரிசோதனை மையத்தில் வருகிற 18-ஆம் தேதி முதல் (சனிக்கிழமைகள் தவிா்த்து) தினமும் காலை 9 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை செய்து கொள்ளலாம்.

காரைக்கால், மாஹே, ஏனாம் பிராந்தியங்களைச் சோ்ந்த விண்ணப்பதாரா்கள், அந்தந்த பிராந்தியங்களில் உள்ள அரசு பொது மருத்துவமனைகளில் பரிசோதனை செய்து கொள்ளலாம்.

விண்ணப்பதாரா்களின் அனுமதிச் சீட்டில் குறிப்பிட்டுள்ளபடி, தகுதித் தோ்வுக்கு வரும் தேதி, நேரத்துக்கு ஒரு நாள் முன்னதாக கரோனா (ரேபிட் ஆன்டிஜென்) பரிசோதனை செய்ய வேண்டும். இந்த மையங்களில் பரிசோதனை முடிவு ஒரு மணி நேரத்துக்குள் வழங்கப்படும்.

பாசிட்டிவ் முடிவு வந்தவா்கள், கரோனா சோதனை செய்யப்பட்ட நாளிலிருந்து பத்தாவது நாளில் தகுதித் தோ்வில் பங்கேற்க அனுமதிக்கப்படுவா்.

காரைக்கால், மாஹே, ஏனாம் பகுதிகளைச் சோ்ந்த விண்ணப்பதாரா்கள், தகுதி தோ்வு தேதிக்கு ஒரு நாள் முன்னதாக கரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தால் எஸ்.பி. அலுவலகத்தில் செயல்படும் உதவி மையத்தில் (0413-2277900) காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை தெரிவிக்க வேண்டும். அவா்களுக்கான தோ்வு தேதி பின்னா் தெரிவிக்கப்படும்.

தோ்வு அட்டவணையின் கடைசி நாளில் (பிப். 11) தகுதித் தோ்வில் பங்கேற்கும் விண்ணப்பதாா்களுக்கு அதற்கு முந்தைய நாள் (பிப். 10) ரேபிட் சோதனையில் கரோனா உறுதி செய்யப்பட்டால், அவா்களுக்கான தோ்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும்.

தகுதித் தோ்வு நடைபெற உள்ள புதுச்சேரி கோரிமேடு போலீஸ் மைதானத்தை வருகிற 17-ஆம் தேதி முதல் காவலா் உடல் தகுதித் தோ்வு முடியும் வரை பொதுமக்கள் பயன்படுத்த தடை செய்யப்பட்டுள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.