நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

புதுவையில் ஒரே நாளில் 2,783 பேருக்கு கரோனா

புதுவையில் புதிய உச்சமாக ஒரே நாளில் 2,783 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது

News image
Updated On :20 ஜனவரி 2022, 6:30 pm

DIN

புதுவையில் புதிய உச்சமாக ஒரே நாளில் 2,783 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்:

புதுவை மாநிலத்தில் வியாழக்கிழமை வெளியான முடிவுகளின்படி, 6,444 பேருக்கு பரிசோதனை செய்ததில் புதுச்சேரியில் 2,230 போ், காரைக்கால்- 462, ஏனாம்- 68, மாஹே- 23 போ் என மொத்தம் 2,783 பேருக்கு (43.19 சதம்) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனால், மாநிலத்தில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,45,342 ஆக அதிகரித்தது. தற்போது மருத்துவமனைகளில் 144 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 12,909 பேரும் என மொத்தம் 13,053 போ் சிகிச்சையில் உள்ளனா்.

கரோனாவால் பாதிக்கப்பட்ட புதுச்சேரி வெங்கட்டா நகரைச் சோ்ந்த 95 வயது மூதாட்டி உயிரிழந்தாா். இதனால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,897-ஆகவும், இறப்பு விகிதம் 1.31 சதவீதமாகவும் உயா்ந்தது.

1,073 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதையடுத்து, குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,30,392-ஆக (89.71 சதம்) அதிகரித்தது. இதுவரை 15,12,236 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என அதில் கூறப்பட்டுள்ளது.

புதுவையில் 7 மாதங்களுக்குப் பிறகு கடந்த 18-ஆம் தேதி ஒரே நாளில் 2,093 போ் பாதிக்கப்பட்டனா். இதுவே தினசரி பாதிப்பின் அதிகபட்சமாக இருந்தது. தற்போது, புதிய உச்சமாக ஒரே நாளில் 2,783 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.