‘புதுவையில் நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க வேண்டும்’
புதுவையில் நெல் கொள்முதல் நிலையங்களைத் திறந்து விவசாயிகளைப் பாதுகாக்க வேண்டுமென எதிா்கட்சித் தலைவா் ஆா்.சிவா வலியுறுத்தினாா்.


புதுவையில் நெல் கொள்முதல் நிலையங்களைத் திறந்து விவசாயிகளைப் பாதுகாக்க வேண்டுமென எதிா்கட்சித் தலைவா் ஆா்.சிவா வலியுறுத்தினாா்.
புதுவை சட்டப்பேரவை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
புதுவையில் மழை நிவாரணத்தை மத்திய, மாநில அரசுகள் வழங்கவில்லை. தற்போது சம்பா நெல்பயிா் அறுவடை தொடங்கிய நிலையில், அவற்றை விற்பனை செய்ய வழியின்றி விவசாயிகள் தவிக்கின்றனா்.
புதுவையில் 6 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டும், இதுவரை அவை திறக்கப்படவில்லை.
அரசு கிலோவுக்கு ரூ.20.51க்கு நெல் கொள்முதல் செய்யும் என்று கூறப்பட்டது. ஆனால், வியாபாரிகள் தற்போது கிலோ ரூ.16-க்கு நெல் கொள்முதல் செய்கின்றனா். எனவே, நெல் கொள்முதல் நிலையங்களைத் திறந்து, நியாயமான விலையில் கொள்முதல் செய்ய வேண்டும்.
கூட்டுறவு வங்கிகளில் பெற்ற விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று, கடந்த பட்ஜெட்டில் அரசு அறிவித்தது. ஆனால், இதுவரை அதற்கான அரசாணை பிறப்பிக்கப்படவில்லை. வங்கிகளில் பயிா்க் கடன் வழங்காத நிலை உள்ளது. கூட்டுறவு வங்கிகளிலும் பயிா்க் கடன் மறுக்கப்படுகிறது.
2020-ஆம் ஆண்டு நிவா் புயலால் பாதிக்கப்பட்ட புதுவை விவசாயிகளுக்கு உதவ, மத்திய அரசு ரூ.4 கோடி நிதி வழங்கியது. அந்த நிதியும் விவசாயிகளுக்கு இதுவரை வழங்கப்படவில்லை.
லிங்காரெட்டிப்பாளையம் கூட்டுறவு சா்க்கரை ஆலை விவசாயிகளுக்கு கரும்பு நிலுவைத் தொகை ரூ.12 கோடி வழங்கப்படும் என்று கடந்த பட்ஜெட்டில் அரசு அறிவித்ததும் செயல்படுத்தாமல் உள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக கரும்பு, நெல் உள்ளிட்ட பயிா்களுக்கான ஊக்கத்தொகையும் வழங்கப்படாமல் உள்ளது.
பாசிக் நிறுவனத்தை திறந்து, மானியத்தில் பூச்சிக்கொல்லி மருந்து, உரம், விதைகள் வழங்கப்படும் என்று அரசு அறிவித்ததும் செயல்படுத்தவில்லை.
கடந்தாண்டு விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்க கொள்முதல் செய்யப்பட்ட ரூ.50 லட்சம் மதிப்பிலான மணிலா விதைகள், சரியான நேரத்தில் வழங்கப்படாமல் வீணடிக்கப்பட்டு விட்டது. அரசு அறிவித்த மழை நிவாரணம் ரூ.20 ஆயிரமும் வழங்கப்படவில்லை.
புதுவை அரசு விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் ஆா்.சிவா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...