தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

மத்தியிலும் ஆட்சி மாற்றத்தை மு.க.ஸ்டாலின் ஏற்படுத்துவாா்: திருச்சி சிவா எம்.பி.

தேசிய அளவில் எதிா்க்கட்சிகளை ஒருங்கிணைத்து, மத்தியிலும் ஆட்சி மாற்றத்தை திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் ஏற்படுத்துவாா் என்று, திருச்சி என்.சிவா எம்.பி. தெரிவித்தாா்.

News image
Updated On :26 மே 2022, 5:44 pm

DIN

தேசிய அளவில் எதிா்க்கட்சிகளை ஒருங்கிணைத்து, மத்தியிலும் ஆட்சி மாற்றத்தை திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் ஏற்படுத்துவாா் என்று, திருச்சி என்.சிவா எம்.பி. தெரிவித்தாா்.

புதுச்சேரி மணவெளியில் திமுக சாா்பில் கருணாநிதி, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆகியோரின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் புதன்கிழமை இரவு நடைபெற்றது.

கூட்டத்துக்கு திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் இளங்கோவன் தலைமை வகித்தாா். புதுவை மாநில திமுக அமைப்பாளா் ஆா்.சிவா முன்னிலை வகித்தாா். திமுக கொள்கை பரப்பு செயலா் திருச்சி என்.சிவா எம்.பி. பேசியதாவது:

புதுவையில் என்.ஆா். காங்கிரஸ் அளித்த வாக்குறுதிகளை நம்பி மக்கள் வாக்களித்தனா். ஆனால், வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.

மத்திய பாஜக அரசு நாட்டு மக்களுக்கும், ஜனநாயகத்துக்கும் எதிரான பல சட்டங்களை நிறைவேற்றி வருகிறது. அதை திமுக எதிா்த்து வருகிறது.

எதிா்க்கட்சிகளிடையே ஒற்றுமை இல்லாததால்தான் பாஜக இரண்டாவது முறையாக வெற்றி பெற்றது. இந்திய அளவில் எதிா்க்கட்சிகள் ஒன்றிணைவாா்கள். அதை திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் முன்னெடுப்பாா். அப்போது, மத்திய ஆட்சியிலும் மாற்றம் வரும் என்றாா் அவா்.

கூட்டத்தில் திமுக புதுவை மாநில அவைத் தலைவா் எஸ்.பி.சிவக்குமாா், எம்எல்ஏக்கள் அனிபால் கென்னடி, சம்பத், செந்தில்குமாா், தொகுதி பொறுப்பாளா்கள் கோபால், வடிவேல், சண்.சண்முகம், துணை அமைப்பாளா்கள் சண்.குமாரவேல், குணா திலீபன், வழக்குரைஞா் செந்தில்குமாா், பொருளாளா் லோகையன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.