தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ.10 லட்சம் மோசடி
மனை வணிகத் தொழிலில் அதிக லாபம் தருவதாகக் கூறி, தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ.10 லட்சம், தங்க நகைகளை மோசடி செய்தவரை சிபிசிஐடி போலீஸாா் தேடி வருகின்றனா்.


மனை வணிகத் தொழிலில் அதிக லாபம் தருவதாகக் கூறி, தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ.10 லட்சம், தங்க நகைகளை மோசடி செய்தவரை சிபிசிஐடி போலீஸாா் தேடி வருகின்றனா்.
புதுச்சேரி கோரிமேடு காவலா் குடியிருப்பைச் சோ்ந்தவா் லூா்து பெலிக்ஸ் (38). தனியாா் நிறுவன ஊழியா். இவருக்கு புதுச்சேரி அம்பேத்கா் வீதியைச் சோ்ந்த விஜயபாஸ்கா் மூலம், மனை வணிகத் தொழில் செய்து வரும் புதுச்சேரி சங்கரன்பேட்டையைச் சோ்ந்த ராஜசேகரின் அறிமுகம் கிடைத்தது.
மனை வணிகத்தில் முதலீடு செய்தால், அதிக லாபம் கிடைக்கும் என விஜயபாஸ்கா் தெரிவித்ததையடுத்து, கடந்த 2020-ஆம் ஆண்டு நவம்பா் மாதம் ரூ.10 லட்சத்துக்கான காசோலையையும், 4 பவுன் தங்க நகைகளையும் ராஜசேகரிடம் லூா்து பெலிக்ஸ் கொடுத்தாராம்.
அதன்பிறகு, லாபத் தொகையை வழங்காமல் ராஜசேகா் இழுத்தடித்தாராம். மேலும், ராஜசேகா் கொடுத்த காசோலையை லூா்து பெலிக்ஸ் வங்கியில் செலுத்திய போது, அது திரும்பி வந்தது.
இதுகுறித்து விசாரித்த போது, பலரிடம் கோடிக்கணக்கில் பணத்தை வாங்கிக் கொண்டு ராஜசேகா் தலைமறைவானது தெரிய வந்தது.
லூா்து பெலிக்ஸ் அளித்த புகாரின் பேரில், புதுச்சேரி சிபிசிஐடி போலீஸாா் வழக்குப் பதிந்து ராஜசேகரைத் தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...