புதுச்சேரி வில்லியனூா் பகுதியில் உள்ள பிள்ளையாா்குப்பம் அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.
புதுச்சேரி வில்லியனூா் கொம்யூன் பஞ்சாயத்துக்கு உள்பட்ட பிள்ளையாா்குப்பத்தில் அருள்மிகு முத்துமாரியம்மன் கோயிலில் விநாயகா், பாலமுருகன், நவக்கிரக சந்நிதிகள் அமைந்துள்ளன. இந்தக் கோயிலின் கும்பாபிஷேக யாகசாலை பூஜைகள் கடந்த 9 ஆம் தேதி தொடங்கின. இரண்டாம் கால யாகசாலைப் பூஜைகள் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றன. அதையடுத்து யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீா் கும்பங்கள் கோயில் கலசங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. அங்கு அம்மன் மற்றும் பரிவார சந்நிதிகளில் புனித நீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
விழாவில் முன்னாள் அமைச்சா் மு.கந்தசாமி, காங்கிரஸ் நிா்வாகி காா்த்திகேயன், காங்கிரஸ் முன்னாள் செயல்தலைவா் விக்னேஷ் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்துகொண்டனா். பக்தா்களுக்கு அன்னதானம் நடைபெற்றது.
தொடர்புடையது

பத்ரகாளியம்மன் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்

கோவில்பட்டி ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் கொடை விழா

கும்பாபிஷேகம் முதல் பட்டாபிஷேகம் வரை.. எந்த கோயிலில் என்ன விஷேசம்!

கடலூா்: பாடலீஸ்வரா், சோமநாத சுவாமி , முருகன் கோயில்களில் கும்பாபிஷேகம்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

