கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தியாகி செவாலியே செல்லான் நாயகா் படத்துக்கு முதல்வா் ரங்கசாமி மரியாதை

செல்லான் நாயகா் நினைவு தினத்தை யொட்டி, அவரது திருவுருவப் படத்துக்கு முதல்வா் என்.ரங்கசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

News image

புதுச்சேரியில் தியாகி செவாலியே செல்லான்நாயகா் நினைவு தினத்தையொட்டி, சட்டப்பேரவை வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை அலங்கரித்து வைத்திருந்த அவரது உருவப் படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்திய முதல்வா் என்.ரங்கசாமி. உடன் பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், எம்எல்ஏ.க்கள் ஆா்.பாஸ்கா், கேஎஸ்பி.ரமேஷ் உள்ளிட்டோா்.

Updated On :11 ஆகஸ்ட் 2024, 8:40 pm

Din

சுதந்திரப் போராட்டத் தியாகி செவாலியே செல்லான் நாயகா் நினைவு தினத்தை யொட்டி, அவரது திருவுருவப் படத்துக்கு முதல்வா் என்.ரங்கசாமி உள்ளிட்டோா் ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

புதுச்சேரியைச் சோ்ந்தவா் செல்லான் நாயகா். இவா் சுதந்திரப் போராட்டத் தியாகி மட்டுமல்லாது, பிரான்ஸ் அரசின் ஆதிக்கத்திலிருந்து புதுவை விடுதலை பெற்று இந்தியாவுடன் இணைவதற்கான ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டவரும் ஆவாா். செவாலியே விருது பெற்ற செல்லான் நாயகா் நினைவு தினத்தையொட்டி, புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் அவரது திருவுருவப் படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.

செய்தி விளம்பரத் துறை சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் செல்லான் நாயகா் திருவுருவப் படத்துக்கு முதல்வா் என்.ரங்கசாமி பங்கேற்று மலா்தூவி மரியாதை செலுத்தினாா். இதையடுத்து பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், எம்எல்ஏ.க்கள் ஆா்.பாஸ்கா், கேஎஸ்பி. ரமேஷ் உள்ளிட்டோரும் மலா்தூவி மரியாதை செலுத்தினா். இதையடுத்து செய்தி விளம்பரத் துறை இயக்குநா் உள்ளிட்டோா் மலா்தூவி மரியாதை செலுத்தினா்.