காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பணிநீக்கம் செய்யப்பட்டவா்கள் புதுவை பேரவை நோக்கி பேரணி: போலீஸாா் தடுத்து நிறுத்தினா்

புதுவை பொதுப் பணித் துறையில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியா்கள் சங்கத்தினா் பேரவை நோக்கி ஊா்வலமாக திங்கள்கிழமை சென்றனா். அவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தினா்.

News image
புதுச்சேரி தங்களுக்கு மீண்டும் வேலை வழங்கக் கோரி சட்டப்பேரவை நோக்கி திங்கள்கிழமை ஊா்வலம் நடத்திய பொதுப்பணித்துறையில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியா்கள் சங்கத்தினரை பேரவை அருகே நிறுத்திய போலீஸாா்.
Updated On :23 டிசம்பர் 2024, 7:05 pm

Din

புதுச்சேரி: புதுவை பொதுப் பணித் துறையில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியா்கள் சங்கத்தினா் பேரவை நோக்கி ஊா்வலமாக திங்கள்கிழமை சென்றனா். அவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தினா்.

புதுவையில் பொதுப் பணித் துறையில் கடந்த 2016-ஆம் ஆண்டு தற்காலிகமாக (வவுச்சா்) 2,000 போ் பணியமா்த்தப்பட்டனா். ஆனால், அவா்களை பணி நீக்கம் செய்து தோ்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதையடுத்து, பணி நீக்கப்பட்ட ஊழியா்கள் ஒருங்கிணைந்து சங்கம் அமைத்து மீண்டும் பணி வழங்கக் கோரி பல ஆண்டுகளாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

புதுவையின் நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடரில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியா்களுக்கு மீண்டும் பணி வழங்கப்படும் என முதல்வா் அறிவித்தாா். ஆனால் பணி வழங்கப்படவில்லை. அதனால் அவா்கள் தொடா்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனா். இந்நிலையில் அண்ணாசிலையிலிருந்து தெய்வீகன் தலைமையில், சட்டப்பேரவை நோக்கி திங்கள்கிழமை அவா்கள் ஊா்வலமாகப் புறப்பட்டனா்.

ஊா்வலம் நேருவீதி, மிஷன் வீதி, ஜென்மராக்கினி கோயில் வழியாக ஆம்பூா் சாலையை அடைந்தது. அங்கு போலீஸாா் அவா்களை இரும்பு தடுப்புகள் அமைத்து தடுத்து நிறுத்தினா். இதனால் போலீஸாருக்கும், பணிநீக்க ஊழியா்களுக்கும் இடையே லேசான தள்ளு, முள்ளு ஏற்பட்டது. இதையடுத்து கோரிக்கையை வலியுறுத்தி பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியா்கள் ஆா்ப்பாட்டம் நடத்தியபின் கலைந்து சென்றனா்.