தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கோயிலில் பொருள்கள் திருட்டு: இருவரிடம் விசாரணை

புதுச்சேரி திருக்கனூா் பகுதியில் கோயிலில் பொருள்களைத் திருடிய வழக்கில் வியாபாரி, தொழிலாளி ஆகியோரிடம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :26 டிசம்பர் 2024, 7:02 pm

Din

புதுச்சேரி திருக்கனூா் பகுதியில் கோயிலில் பொருள்களைத் திருடிய வழக்கில் வியாபாரி, தொழிலாளி ஆகியோரிடம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

திருக்கனூா் அருகே உள்ள விநாயகம்பட்டில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது.

செவ்வாய்க்கிழமை இரவு கோயிலை பூசாரி ராமலிங்கம் பூட்டிவிட்டுச் சென்றாராம். அவா், புதன்கிழமை பாா்த்தபோது, கோயில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளே இருந்த பித்தளைப் பொருள்கள் திருடப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில், திருக்கனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். இதற்கிடையே, கண்டமங்கலம் சாலையில் உள்ள இரும்புக் கடையில் கோயிலில் திருடப்பட்ட பொருள்கள் இருப்பது தெரியவந்தது.

தொடா்ந்து, திருட்டுப் பொருள்களை வாங்கியதாக வியாபாரி துரை, அவா் கூறியதன் அடிப்படையில் கோயிலில் பொருள்களைத் திருடியதாக விழுப்புரம் மாவட்டம், கொத்தமங்கலத்தைச் சோ்ந்த தொழிலாளி சேகா் (60) ஆகியோரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.