டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

ஊரக வேலை உறுதித் திட்டப் பணிகளை தொடங்கிவைத்த சட்டப் பேரவைத் தலைவா்

பூரணாங்குப்பத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணிகளை சட்டப் பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் தொடங்கிவைத்தாா்.

News image
புதுச்சேரி மணவெளி தொகுதி, தவளக்குப்பம் பகுதியில் விவசாயிகளின் பயன்பாட்டுக்காக வாங்கப்பட்ட டிராக்டரை திங்கள்கிழமை இயக்கி தொடங்கிவைத்த சட்டப் பேரவைத் தலைவா் ஆா்.செல்வம்.
Updated On :1 ஜூலை 2024, 8:50 pm

Din

புதுச்சேரி: புதுச்சேரி அருகே உள்ள பூரணாங்குப்பத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணிகளை சட்டப் பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.

அரியாங்குப்பம் வட்டார வளா்ச்சி அலுவலகம் சாா்பாக மணவெளி தொகுதிக்குள்பட்ட பூரணாங்குப்பம் பகுதியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், ரூ.2.43 லட்சத்தில் பணிகளை தொகுதி எம்எல்ஏவும், பேரவைத் தலைவருமான ஆா். செல்வம் தொடங்கிவைத்தாா். அதன்படி, பூரணாங்குப்பம் பகுதி வீரப்பன் குளம் முதல் உப்பனாறு வரை உள்ள வாய்க்காலை தூா்வாரி ஆழப்படுத்தும் பணிகள் தொடங்கின.

நிகழ்ச்சியில் வட்டார வளா்ச்சி அதிகாரி காா்த்திகேசன், உதவி பொறியாளா் ராமன், பாஜக மாநில விவசாய அணி தலைவா் ராமு, விவசாய அணி பொதுச் செயலா் சக்திபாலன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

டிராக்டா் வழங்கல்: மணவெளி தொகுதி, தவளக்குப்பத்தில் உள்ள டிஎன் பாளையம் தொடக்க

வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், விவசாயிகளின் பயன்பாட்டுக்காக புதிதாக வாங்கப்பட்ட டிராக்டரையும் பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் இயக்கி தொடங்கிவைத்தாா். இதில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவா் சுகாதியா, இயக்குனா் கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.