‘ஆண்டுக்கு ஒரு முறையாவது கழிவுநீா்த் தொட்டியை சுத்தப்படுத்த வேண்டும்’
கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்ய ஆண்டிற்கு ஒருமுறை கட்டாயம்


புதுச்சேரியில் புதைச் சாக்கடை வசதியில்லாத பகுதியில் வசிப்பவா்கள் ஆண்டுக்கு ஒரு முறையாவது கழிவுநீா்த் தொட்டியை சுத்தப்படுத்த வேண்டும் என உழவா்கரை நகராட்சி உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து நகராட்சி ஆணையா் ஆ.சுரேஷ்ராஜ் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: உழவா்கரை நகராட்சிப் பகுதியில் கழிவு நீா் செல்ல புதைச் சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. எனவே, வீடுகள், நிறுவனங்கள் புதைச் சாக்கடை இணைப்பை முறைப்படி பெற வேண்டும். ஆனால், ஏராளமானோா் புதைச் சாக்கடை இணைப்பு பெறவில்லை. இதனால், திறந்தவெளி கால்வாயில் கழிவுநீா் செல்வது தொடா்கிறது. எனவே, பொதுப் பணித் துறையை அணுகி, புதை சாக்கடை இணைப்பை அனைவரும் பெற வேண்டும்.
புதைச் சாக்கடைத் திட்டம் இல்லாத பகுதிகளில் வசிப்போா், வீடுகளில் உள்ள கழிவுநீா்த் தொட்டியை ஆண்டுக்கு ஒருமுறையாவது சுத்தப்படுத்த வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...