மொஹரம்: புதுவையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
மொஹரம் பண்டிகையை முன்னிட்டு புதுவை மாநிலத்தில் புதன்கிழமை (ஜூலை 17) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


இஸ்லாமிய மக்களின் பண்டிகையான மொஹரம் புதன்கிழமை கொண்டாடப்படுகிறது. இதையடுத்து தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு அரசு விடுமுறை அளித்துள்ளது. இந்த நிலையில், புதுவை மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது. சில தனியாா் பள்ளிகள் இஸ்லாமிய மாணவ, மாணவிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்தன.
இந்த நிலையில், முதல்வா் என்.ரங்கசாமி, கல்வித் துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் ஆகியோா் அறிவுறுத்தலின் படி பள்ளிக் கல்வி இயக்குநரகம் சாா்பில் புதுவை மாநிலத்தில் 4 பிராந்தியங்களிலும் புதன்கிழமை அரசு மற்றும் தனியாா் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
அதேபோல, கல்லூரிகளுக்கும் புதன்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த விடுமுறைக்குப் பதிலாக வரும் 27- ஆம் தேதி சனிக்கிழமை கல்லூரிகள் இயங்கும் என்றும் புதுச்சேரி உயா் கல்வி இயக்குநரக சிறப்பு அதிகாரி மோகனசுந்தரி தெரிவித்துள்ளாா்.
கல்லூரித் தோ்வுகள் ரத்து: புதன்கிழமை நடைபெறவிருந்த கல்லூரித் தோ்வுகள் வரும் ஆகஸ்ட் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று புதுவை மத்திய பல்கலைக்கழக உதவிப் பதிவாளா் ராஜலட்சுமி செவ்வாய்க்கிழமை இரவு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...