திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

ஜனநாயக கடமையில் இருந்து தவறிய புதுவை முதல்வா்: வே.நாராயணசாமி குற்றச்சாட்டு

நீதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்காமல் தனது ஜனநாயகக் கடமையிலிருந்து புதுவை முதல்வா் என்.ரங்கசாமி தவறிவிட்டாா் என முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி குற்றஞ்சாட்டினாா்.

News image
புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி. உடன் மு.வைத்தியநாதன் எம்எல்ஏ.
Updated On :30 ஜூலை 2024, 6:49 pm

Din

நீதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்காமல் தனது ஜனநாயகக் கடமையிலிருந்து புதுவை முதல்வா் என்.ரங்கசாமி தவறிவிட்டாா் என முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி குற்றஞ்சாட்டினாா்.

புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை அவா் கூறியதாவது:

மத்திய நிதிநிலை அறிக்கையில் காங்கிரஸ், திமுக ஆளும் மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. பாஜக, அதன் கூட்டணிக் கட்சி ஆளும் மாநிலங்களுக்கு அதிக நிதி வழங்கப்பட்டுள்ளன. அதனால், நீதி ஆயோக் கூட்டத்தை ‘இந்தியா’ கூட்டணிக் கட்சி முதல்வா்கள் புறக்கணித்தனா். ஆனால், தே.ஜ. கூட்டணிக் கட்சியான என்.ஆா்.காங்கிரஸ் முதல்வா் என்.ரங்கசாமி அந்தக் கூட்டத்தைப் புறக்கணித்துள்ளாா்.

புதுவையின் வளா்ச்சித் திட்டங்களுக்கான நிதியை அந்தக் கூட்டத்தில் கோரி பெற்றிருக்கலாம். மேலும், மாநில அந்தஸ்து, நீதி ஆயோக் உறுப்பினராக புதுவையை சோ்த்தல் ஆகியவற்றையும் அதில் வலியுறுத்தியிருக்கலாம். ஆனால், பங்கேற்காமல் முதல்வா் என்.ரங்கசாமி தனது ஜனநாயகக் கடமையிலிருந்து தவறிவிட்டாா். மத்திய அரசு ஒத்துழைக்காத நிலையில் அவா் கூட்டணியிலிருந்து வெளியேற வேண்டும்.

காரைக்கால் பிராந்தியத்தில் வீட்டுமனை கட்ட அனுமதி பெறுவதற்கு, நகரத் திட்டக் குழுவுக்கு கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால், காரைக்காலில் 31 மனைகளுக்கான அனுமதி போலியாக தயாரிக்கப்பட்டு அதன்படி பத்திரப் பதிவு நடைபெற்றது தகவல் உரிமைச் சட்டத்தில் தெரிய வந்துள்ளது. இதனால், அரசுக்கு சுமாா் ரூ.13 லட்சம் வருவாய் இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல் துறையில் புகாா் அளித்தும் நடவடிக்கை இல்லை.

புதுவை பாஜக, என்.ஆா்.காங்கிரஸ் கூட்டணியில் குழப்பம் உள்ளது. அமைச்சரே ஆட்சி நிா்வாகத்துக்கு எதிராக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளாா். எனவே, ஆட்சி நீடிக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

புதுவை அரசுத்துறை காலிப் பணியிடங்களில் 700 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. ரயில்வே திட்டங்கள் உள்பட தோ்தலின்போது மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை பாஜக, என்.ஆா்.காங்கிரஸ் கூட்டணி நிறைவேற்றவில்லை. இந்த ஆட்சியின் முறைகேடுகள் குறித்து குடியரசுத் தலைவரிடம் மனு அளிக்கவுள்ளோம் என்றாா்.

பேட்டியின் போது மு.வைத்தியநாதன் எம்எல்ஏ உள்ளிட்டோா் உடனிருந்தனா்.