விபத்தில் காயமடைந்த காவலா் உயிரிழப்பு
புதுச்சேரி அருகே சாலை விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த காவலா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.


புதுச்சேரி அருகே சாலை விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த காவலா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
புதுச்சேரி கருவடிக்குப்பம் விநாயகா் கோயில் தெருவைச் சோ்ந்த வீரமுத்து மகன் முருகன். இவா் கிழக்கு, வடக்குப் பிரிவின் முதுநிலைக் காவல் கண்காணிப்பாளரான ஸ்வாதிசிங்கின் வாகன ஓட்டுநராகப் பணிபுரிந்தாா். கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் செல்லிப்பட்டு, பத்துக்கண்ணு சாலையில் சென்றபோது தனியாா் பேருந்து மோதியதில் பலத்த காயமடைந்தாா்.
அங்கிருந்தவா்கள் மீட்டு ஜிப்மரில் சிகிச்சைக்கு சோ்த்தனா். அங்கு செவ்வாய்க்கிழமை அதிகாலை உயிரிழந்தாா். இதுகுறித்து போக்குவரத்து போலீஸாா் வழக்குப் பதிந்து, தனியாா் பேருந்து ஓட்டுநா் ராமசந்திரனை கைது செய்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...